தமிழ்நாட்டின் பெருமையையும், தமிழின் பெருமையையும் கூறுவதில் சென்னைக்கு இன்றியமையாத பங்கு இருக்கிறது. அவ்வாறு சென்னை பெருமை சேர்க்கும் இடமாக மாறியதற்கு, தி.மு.க.வின் பங்கும் கலைஞரின் பங்கும் இன்றியமையாததாய் இருக்கிறது.
அதன் தொடர்ச்சியாக, நடப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை மேயராகவும் இருந்து, சென்னையில் முக்கிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தியவர்.
அவ்வகையில், உலகின் 31-வது பெரிய நகரம், இந்தியாவின் 4-வது பெரிய நகரம், பழமையான வரலாற்று அடையாளங்களையும், புதுமையான தொழில்நுட்பத்தின் ஆச்சரியங்களையும் ஒருசேர கலவையாக தாங்கி நிற்கும் நகரம் என பல பெருமைகளைக் கொண்ட சென்னை மாநகரின் 385-வது பிறந்தநாளான இன்று,
தனது X தளத்தில் பதிவிட்ட முதலமைச்சர், “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது.
வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை!
இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்!
பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய - எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.