மு.க.ஸ்டாலின்

பெண்­கள் மத்­தி­யில் முதலமைச்சரின் செல்­வாக்கு அதிகரித்து வருகிறது - The New Indian Express புகழாரம் !

முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­­களுக்கு மக­ளிர் மத்­தி­யில் செல்­வாக்கு உயர்ந்து கொண்­டி­ருக்­கி­றது என்று ‘தி நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’ ஆங்­கில நாளேடு புக­ழா­ரம் சூட்­டி­யுள்­ளத

பெண்­கள் மத்­தி­யில் முதலமைச்சரின் செல்­வாக்கு அதிகரித்து வருகிறது - The New Indian Express புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

“தி நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்” நாளேட்­டில் (23.09.2023) வெளி­யா­கி­யுள்ள சிறப்­புக் கட்­டுரை வரு­மாறு:–

1.06 கோடி குடும்­பத் தலை­வி­க­ளுக்கு மாதம் ரூ.1000 கொடுக்­கக்­கூ­டிய கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகைத் ­திட்­டத்தை கடந்த செப்­டம்­பர் 15–ஆம் நாள் தொடங்­கி­வைத்த தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்து வீடு­க­ளுக்கு முன்­னால் பெண்­கள் வண்ண வண்­ணக் கோலங்­க­ளிட்ட அழ­கி­னைப் பல­ரும் பெரி­தா­கக் கவ­னிக்­க­வில்லை.

தொன்று தொட்டு விடி­யற்­ காலை­யில் பெண்­கள் வீட்­டிற்கு முன்­னால் கோலங்­கள் தீட்டி அழ­கு­ப­டுத்­து­வது அவர்­க­ளது முன்­னு­ரிமை. இதனை 1957–ஆம்ஆண்டு குளித்­தலைதொகு­தி­யி­லி­ருந்து முதன் முத­லாக சட்­ட­மன்­றத் தேர்­த­லில்போட்­டி­யிட்ட பொழுது,உத­ய­சூ­ரி­யன் சின்­னத்தை முன்­னாள் முத­ல­மைச்­சர்கலை­ஞர் அவர்­கள் பிர­ப­லப்­படுத்­திப் பயன்­ப­டுத்­திக்­கொண்­டார்.

குளித்­த­லை­யில் கலைஞர் கையாண்ட முறை!

‘உத­ய­சூ­ரி­யன்’ அந்­தக் காலத்­தில் சுயேட்­சை­க­ளின் சின்­ன­மாக இருந்­தது. அதற்கு உள்­ளூ­ரில் விளம்­ப­ரம் தேவைப்­பட்­டது. தாய்­மார்­க­ளின் ஆத­ரவை நாடி கலை­ஞர் அவர்­கள் தேர்­தல் பரப்­புரை செய்­த­பொ­ழுது வீடு­க­ளுக்கு முன்பு உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தைக் கோல­மாக வரைந்­தி­டு­மாறு பெண்­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

இதற்கு பெண்­கள் இசைந்து அவ்­வாறே செய்­த­னர் என்­பதை கலை­ஞர் தனது வாழ்க்கை வர­லாற்று நூலான ‘நெஞ்­சுக்கு நீதி­யில் குறிப்­பிட்­டுள்­ளார். தண்­ணீர்­பள்­ளம் என்­கிற ஊரில் வாக்­குச்­ ­சாவ­டி­யில் கலை­ஞரை எதிர்த்து நின்ற காங்­கி­ரசு வேட்­பா­ள­ருக்கு ஒரு வாக்­குக்­கூட கிடைக்­க­ வில்லை. இதற்கு பெண்­களே கார­ணம்.

முதல்­வர் மு.க.ஸ்டாலி­னுக்கு நன்றி தெரி­விக்­கும் இந்த வண்­ணக்­கோ­லங்­கள், கலை­ஞர் தனது முன்­னோ­டி­யான செயல்­க­ளா­லும், திட்­டங்­க­ளா­லும் தாய்­மார்­க­ளின் உள்­ளங்­களை வென்­றார் என்­ப­தை­யும், 1967–ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்­சிக்கு வந்த பின்­னர் பெண்­க­ளுக்கு சொத்­து­ரி­மை­கள் வழங்­கப்­பட்­டன என்­ப­தை­யெல்­லாம் நினை­வூட்­டு­வது மட்­டு­மல்­லா­மல், தற்­போ­துள்ள முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் பெண்­க­ளி­டத்­தில் அன்பை உண்­டாக்­கும் திட்­டங்­கள் தீட்டி செயல்­ப­டு­வ­தை­யும் சுட்­டிக்­காட்­டு ­கின்­ற­னர்.

பெண்­கள் மத்­தி­யில் முதலமைச்சரின் செல்­வாக்கு அதிகரித்து வருகிறது - The New Indian Express புகழாரம் !

இந்த திட்­டத்­தைப் பற்­றிய பொது­ மக்­க­ளின் கருத்தை அறி­யச் சென்­ற­பொ­ழுது, அரி­ய­லூர் கிரா­மத்­தில் ஒரு பெண்­மணி இத்­திட்­டத்தை “தாய் வீட்டு சீத­னம்” என்று குறிப்­பிட்­டார். அந்த அம்­மை­யா­ரின் சொற்­க­ளில் ஒரு­ வி­த­மான எம்.ஜி.ஆர்.–சாயல் இருப்­ப­தைக் கண்டு வியப்­புற்­றேன்.

முதல்­வர் மு.க.ஸ்டாலி­னும் கூட மாண­வி­ய­ருக்­குப் பய­ன­ளிக்­கும் புது­மைப் பெண் திட்­டத்தை தொடங்கி வைத்த பொழுது ‘ஒரு தந்­தை­யைப் போல் நான் உங்­க­ளுங்கு ஆத­ர­வ­ளிப்­பேன்” என்று கூறி­னார். அதே­போன்று மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தைத் தொடங்­கிய போதும், தனது குடும்பத்­தில் பெண்­கள் மீது அவர் கொண்­டி­ருந்த அன்­பை­யும் மரி­யா­தை­யை­யும் பற்­றிப் பேசி­னார்.

அப்­போது அவர் பயன்­ப­டுத்­திய தாயின் கருணை, மனை­வி­யின் உறு­துணை, மக­ளின் பேரன்பு ஆகிய சொற்­றொ­டர்­க­ளால் பெண்­கள் மீது தமது மன­வு­ணர்­வு­களை வெளிப்­ப­டுத்­திக் காண்­பித்­தார்.

இத்­திட்­டத்தை அவர் அறி­மு­கம் செய்த சில நாள்­க­ளுக்­குப்­பின்­னர் ‘தி.மு.க. எதிர்ப்பு அர­சி­யல் சார்­பு­டைய இரண்டு நண்­பர்­க­ளு­டன் பேசிக் கொண்­டி­ருந்­தேன். இவ்­வி­ரு­வ­ரின் மனை­வி­மார்­க­ளும் ரூ.1000 உரி­மைத் தொகை­யைப் பெற்­றி­ருந்­த­னர். இதன் பொருள் – - அந்­தக் குடும்­பங்­க­ளின் வாக்­கு­கள் தி.மு.க.வுக்­குச் செல்­லும் என்­ப­தா­கும்.

உண்­மை­யில், ஆண்­க­ளின் அர­சி­யல் ஈடு­பா­டு­கள் அவர்­க­ளு­டைய குடும்­பத்து பெண்­கள் வாக்­க­ளிக்­கும் முறையை, பாங்­கினை கட்­டா­ய­மாக மாற்­றும் என்­ப­தில்லை. தங்­கள் மனை­வி­மார்­க­ளும், தாயார்­க­ளும் குடும்­பத்து ஆண்­க­ளின் விருப்­பத்­துக்கு மாறாக வாக்­க­ளித்­த­தாக புகார் செய்­வ­தும் நிகழ்ந்­துள்­ளது.

பெண்­கள் மத்­தி­யில் முதலமைச்சரின் செல்­வாக்கு அதிகரித்து வருகிறது - The New Indian Express புகழாரம் !

இப்­பொ­ழுது முழுக்க முழுக்க பெண்­க­ளுக்கு நன்மை தரும், பய­ன­ளிக்­கும்திட்­டங்­களை முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் செயல்­ப­டுத்­து­வ­தால் பெண்­கள் மத்­தி­யில் அவ­ரு­டைய செல்­வாக்கு உயர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. இது பெண்­க­ளின் கூற்­று­க­ளி­லி­ருந்து அறி­யப்­ப­டு­கி­றது. விடி­யல் பய­ணம் (பெண்­க­ளுக்கு கட்­ட­ண­மில்­லாப் பேருந்­துப் பய­ணம்), புது­மைப் பெண் (மேல் படிப்­பு­க­ளுக்­குச் செல்­லும் மாண­வி­ய­ருக்கு மாதந்­தோ­றும் ரூ.1000 உத­வித்­தொகை), பள்ளி மாண­வர்­க­ளுக்­கான முத­ல­மைச்­ச­ரின் காலை உண­வுத்­திட்­டம் ஆகிய திட்­டங்­கள் ஏற்­க­னவே பெண்­க­ளி­டையே பேசு பொரு­ளாக ஆகி­யுள்­ளன.

ஆகவே, கலை­ஞர் மக­ளிர் உரி­மைத்­தொ­கைத் திட்­ட­மா­னது தமிழ்­நாட்டு அர­சி­யல் இயக்க நிலை­யையே மாற்­றிக்­கொண்­டி­ருக்­க­லாம். முதல் முறை­யாக வாக்­க­ளிப்­போர், மக­ளிர், கீழ்த்­தட்டு வர்க்­கத்­தி­னர் (தி.மு.க.வின்) நல்­வாழ்­வுத் திட்­டங்­க­ளால் பெரி­தும் மகிழ்ச்­சி­யுற்­றி­ருக்­கின்­ற­னர். இது தி.மு.க.விற்கு மேலும் ஆத­ர­வா­ளர்­க­ளைக் கொண்டு வந்து சேர்க்­கி­றது.

தற்­போ­தைய தி.மு.க. அர­சின் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்ட திட்­டங்­கள் பெண்­க­ளின் வாழ்­வா­தா­ரம், கண்­ணி­யம், மரி­யாதை, அன்­றாட வாழ்க்கை முறை ஆகி­ய­வற்றை மாற்­றி­ய­மைப்­ப­தன் மூலம் அவர்­க­ளைக் கைதூக்கி விடு­வ­தைக் குறிக்­கோ­ளா­கக் கொண்­டுள்­ளன.

இவ்­வாறு‘தி நியூ இந்­தி­யன் எக்ஸ்­பி­ரஸ்’நாளேட்­டில் வெளி­வந்­துள்ள கட்­டு­ரை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

Related Stories

Related Stories