மு.க.ஸ்டாலின்

“இளைஞரணி வரலாற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

“கழக இளைஞரணியின் வரலாற்றை பேணிப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தம்பி உதயநிதியிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது” என கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று (14.1.2023) சென்னை, அண்ணா அறிவாலயம் – கலைஞர் அரங்கில், தி.மு.க. இளைஞர் அணி செயலியை தொடங்கி வைத்து, உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை பின்வருமாறு :-

நான் இப்போது பிறந்த வீட்டிற்கு வந்திருக்கிறேன். பிறந்து வீட்டிற்கு மட்டுமல்ல, வளர்த்த வீட்டிற்கும் வந்திருக்கிறேன். வளர்த்த வீட்டிற்கு மட்டுமல்ல, வளர்ந்து கொண்டிருக்கக்கூடிய வீட்டிற்கும் வந்திருக்கிறேன். அப்படிப்பட்ட உரிமையோடு இந்த நிகழ்ச்சிக்கு நான் வந்திருக்கிறேன். 

இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, முரசொலி பாசறை, திராவிட மாடல் பயிற்சிப் பாசறை 2.0, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இளைஞர் அணி செயலி, பயிற்சிப் பாசறை கூட்டத்தினுடைய புகைப்பட திரட்டு ஆகிய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ஒரு மிகப்பெரிய விழாவாக, மாபெரும் விழாவாக இதை எழுச்சியோடு, ஏற்றத்தோடு நம்முடைய இளைஞர் அணியின் அமைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது.

இதை நான் உள்ளபடியே தலைமைக் கழகத்தின் சார்பில் மனம்திறந்து பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். உதயநிதியினுடைய தந்தையாக இருந்து மட்டுமல்ல, தந்தையாக இருந்து மகிழ்ச்சியடைகிறேன், தலைவனாக இருந்து பெருமைப்படுகிறேன். அந்த உணர்வோடு அவருக்கும் அவருக்கு துணை நிற்கக்கூடிய துணைச் செயலாளர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் இளைஞர் அணி நிர்வாகிகள் அத்தனை பேருக்கும் நான் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளை, பாராட்டுக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தம்பி உதயநிதி பேசுகிறபோது “நான் இளைஞர் அணியின் செயலாளராக பொறுப்பேற்று மூன்று வருடம் ஆகிற்று. ஆனால், தலைவரை ஒரு நிகழ்ச்சிக்கும் கூப்பிடவில்லை” என்று சொன்னார். ஏன் கூப்பிடவில்லை? அதுதான் எனக்கும் புரியவில்லை. ஒருவேளை இன்றைக்கு நான் ஏற்றுக் கொண்டிருக்கக்கூடிய பொறுப்பின் காரணமாக, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிற காரணத்தால், அந்தப் பொறுப்பிற்கு தலைமையேற்றிருக்கிற காரணத்தால், எனக்கு பல்வேறு பணிகள் இருக்கிறது, அதற்கு நாம் இடையூறு தந்துவிடக்கூடாது என்று ஒருவேளை கருதி, அந்த நல்ல எண்ணத்தோடு அதை அவர் தவிர்த்து இருப்பார் என்று நான் எண்ணிக் கொண்டேன். 

ஆனால் நான் ஒவ்வொரு நாளும் அவரை watch செய்து கொண்டிருக்கிறேன். டி.வி-யில் பார்க்கிறேன், பத்திரிகைகளில் பார்க்கிறேன், ஊடகங்களில் பார்க்கிறேன். சமூக ஊடகங்களை பார்த்தீர்களென்றால், நல்ல செய்திகளும் வருகிறது, கேலி செய்து, விமர்சனம் செய்து, அதுபோன்ற செய்திகளும் வருகிறது, அதையும் watch செய்து கொண்டிருக்கிறேன். நாங்கள் தலைமைக் கழகத்தின் சார்பில் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று மாத்திரம் சொல்ல மாட்டேன், கண்காணித்துக் கொண்டு இருக்கிறேன். 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பொறுப்பேற்று இந்த மூன்று வருடத்தில், மிகவும் சிறப்பான பணிகளை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்று பல அமைப்புகள் இருக்கின்றன, இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தொழிலாளர் அணி, தொண்டர் அணி, இலக்கிய அணி, விவசாய அணி, வழக்கறிஞர் அணி இதுபோன்ற பல்வேறு அமைப்புகள் இருக்கின்றன.  

நான் இளைஞர் அணியின் செயலாளராகப் பொறுப்பேற்றிருந்தபோது, நம்முடைய இளைஞர் அணி தோழர்களுக்கெல்லாம் நான் அடிக்கடி எடுத்துச்சொல்வது உண்டு, நம்முடைய சிவா அவர்கள் இளைஞர் அணியின் துணைச் செயலாளராக எனக்கு துணையாக இருந்து பணியாற்றியிருக்கிறார். இதுபோல பலபேர் என்னோடு துணைநின்று பணியாற்றியவர்கள். அப்போதெல்லாம் நான் அடிக்கடி என்ன சொல்வது உண்டு என்றால், எத்தனை அணிகள் இருந்தாலும், நம்முடைய அணி தான் நம்பர்-1-ல் இருக்கிறது. இதனால் மற்ற அணிகளைச் சார்ந்தவர்கள் கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.

ஏனென்றால், உண்மை நிலை அது, எதார்த்த நிலை அது. அதனால் யாரும் அதைத் தவறாகக் கருத வாய்ப்பே கிடையாது. அதை ஏற்றுக்கொள்வார்கள். அந்த நிலையில் இன்றைக்கு நம்முடைய அமைப்பின் சார்பிலே பல அணிகள் இருந்தாலும், அந்த முதல் இடத்தில் இருக்கக்கூடிய அணியாக இந்த அணி இருப்பது பாராட்டுக்குரியது, பெருமைக்குரியது. அந்த அடிப்படையிலே நம்முடைய உதயநிதி அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டு, அவர் இந்த மூன்றரை ஆண்டுகாலத்திலே பல பணிகள் செய்திருக்கிறார். அதில் சிலவற்றை மட்டும் நான் சொல்ல வேண்டுமென்றால், 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஊராட்சித் தேர்தல் நடந்தது. அந்த ஊராட்சித் தேர்தலையொட்டி பிரச்சாரத்தை நடத்திட வேண்டுமென்று கழகம் தேர்தல் பிரச்சாரத்தை நடத்த வேண்டுமென்பதற்காக பலபேர் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்கள். அதில் தம்பி உதயநிதியும் ஒரு மிகச் சிறப்பான சுற்றுப்பயணத்தை அதுவும் பெரும்பாலும் கிராம அளவிலே, ஊராட்சி அளவிலே அந்தப் பயணத்தை நடத்தி கட்சிக்கு, தேர்தலுக்கு வெற்றிக்கு வாய்ப்பு தேடித் தந்தார் என்பது ஒரு பக்கம். ஆனால் அதையும் தாண்டி, கட்சி அமைப்பிற்கு, கட்சித் தோழர்களுக்கு அந்தப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு ஒரு எழுச்சியை உருவாக்கித் தந்தார் என்பதை யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதைத் தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல், வேறு ஒன்றும் சொல்ல வேண்டாம், ஒரு செங்கல்தான்.  அது எந்த அளவிற்கு பிரச்சாரத்திற்கு பயன்பட்டது, எந்த அளவிற்கு தாக்கம் ஏற்பட்டது, மக்கள் மனதிலே எப்படியெல்லாம் அது பதிந்தது என்பதைப் பற்றி நான் அதிகம் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்றைக்கு அவர் எங்கேயாவது கூட்டத்திற்கு போனார் என்றால், அவரைப் பார்த்தால், செங்கல், செங்கல் என்றுதான் சொல்கிறார்கள், அந்தக் காட்சியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். 

அதற்குப் பின்னால், எதிர்க்கட்சியாக இருக்கிற நேரத்திலேயே அரசாங்கம் செய்யவேண்டிய வேலை நீர்நிலைகளைப் பாதுகாப்பது, தூர் எடுப்பது, அதை அவர்  எல்லா இளைஞர் அணித் தோழர்களுக்கும் ஒரு அறிக்கை விட்டு, ஒரு அறிவிப்பு வெளியிட்டு, ஒரு உத்தரவு போட்டு, எங்கெங்கு தூர் எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதோ, அந்த நீர்நிலைகளையெல்லாம் நீங்கள் சுத்தம் செய்யுங்கள். அந்தப் பகுதி மக்களுக்கு அது பெரிய வரப்பிரசாதமாக அமையும், அது கட்சிக்கும் லாபம் கிடைக்கும் என்று முடிவு செய்து அந்தப் பணியை அறிவித்துவிட்டு மட்டுமல்லாமல், அவரே நேரடியாக பல இடங்களுக்குச் சென்று அந்தப் பணியை நிறைவேற்றியிருக்கிறார். 

அதற்குப்பிறகு, கொரோனா என்ற ஒரு கொடிய தொற்றுநோய் வந்தது. அப்போது எதிர்க்கட்சியாகத்தான் இருந்தோம். ஆளுங்கட்சி செய்யவேண்டிய வேலைகளையெல்லாம் நாம் செய்தோம். ஒன்றிணைவோம் வா என்று ஒரு தலைப்பு போட்டு அதற்குப் பெயர் சூட்டி எல்லோரையும் ஒன்றிணைத்தோம், மருத்துவர்கள், இளைஞர்கள், மாணவர்கள், மாணவியர்கள், நம்முடைய கழகத் தோழர்கள், பொதுநலச் சங்கங்கள் இப்படி பல்வேறு அமைப்புகளையெல்லாம் ஒருங்கிணைத்து மக்களுக்கு நலத் திட்ட உதவிகளைச் செய்தோம்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலைகள் எல்லாம் இருந்தது.  அப்படிப்பட்டவர்களுக்கு நாமே காய்கறிகள், அரிசி எல்லாம் வாங்கிக் கொண்டுபோய் கொடுத்தோம். அதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நம் அமைப்பின் சார்பிலே மாவட்டம், ஒன்றியம், நகரம், பேரூர், கிளை, வார்டு எல்லா அமைப்புகளுமே ஒரு பெரிய வேலை செய்தது. அதேமாதிரிதான் இளைஞரணியும், அவர் செயலாளராக இருந்து இளைஞரணி தோழர்களுக்கு அறிக்கைவிட்டு, அந்தப் பணியை அவர் நிறைவேற்றியிருக்கிறார்.

அப்போது வீடியோ கான்ஃபரன்ஸில் ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் நானே தொடர்பு கொண்டு காணொலிக் காட்சி மூலமாக அவர்களோடு பேசி அந்த வட்டாரத்தில் இருக்கும் மக்களையும் அங்கு வரவழைத்து உங்களுக்கு என்ன குறை, என்ன பிரச்சனை என்று சொல்லுங்கள் என்று கேட்டு, அதற்கப்பிறகு Helpline என்று அறிவாலயத்திலும், அன்பகத்திலும் தொலைபேசி எண் கொடுத்து, Cell Number கொடுத்து தொடர்பு கொள்ளுங்கள், உங்களுக்கு என்ன உதவி வேண்டுமோ அதை செய்கிறோம் என்று முடிவு செய்து அந்தக் காரியத்தைச் செய்தோம். அந்தப் பணியையும், இளைஞரணி மிகப்பெரிய அளவிற்கு மக்களிடத்தில் ஒரு நல்ல பெயரை பெற்றுத்தரக்கூடிய அளவிற்கு அதைச் செய்ததற்காக நான் உள்ளபடியே பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

அதற்குப்பிறகு, நாம் நடத்தியிருக்கக்கூடிய போராட்டக் களங்கள். இந்தி திணிக்கப்படக்கூடிய ஒரு சூழ்நிலை வந்தபோது, இளைஞரணி, மாணவரணி சேர்ந்து போராட்டத்தை நடத்த வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். அந்தப் பணியை செய்தார்கள்.

அதேபோல நீட் தேர்வை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் என்பதற்காக நடத்திய போராட்டங்களிலும் பங்கெடுத்துக் கொண்டார்கள்.  குடியுரிமைத் திருத்தச் சட்டம், அதற்கும் அவர்கள் போராடிய அந்த நினைவுகளெல்லாம் எனக்கு வந்து கொண்டிருக்கிறது. 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

எதற்கு சொல்கிறேனென்றால், இந்த மூன்றரை வருடங்களில் எத்தனையோ பணிகளை கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பல அமைப்புகள் செய்திருந்தாலும் அதிலே இளைஞரணியும் பங்கெடுத்து செய்திருக்கிறது என்பதை எண்ணி நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். 

அதற்குப் பிறகு இன்னொரு அறிவிப்பு வந்தது, செயலாளர் பெயரில். சட்டமன்றத் தொகுதிக்கு பத்தாயிரம் பேர் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும், புதிதாக இளைஞரணியில் உறுப்பினர் சேர்க்க வேண்டுமென்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டு, இதுவரையில் அவர்கள் 25 லட்சத்திற்கு மேற்பட்ட புதிய உறுப்பினர்களை சேர்த்திருக்கிறார்கள் என்பதும் ஒரு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது. 

இதைவிட இன்னுமொன்று சொல்ல வேண்டுமென்றால், கடற்கரையில், அந்த கடலுக்கு மாற்றுத் திறனாளிகள் போகமுடியுமா? கடலுக்கு அருகில் போய் நெருங்கி நிற்க முடியுமா? கடலில் வரும் அலைகளில் போய் காலை வைக்க முடியுமா? என்ற ஒரு ஏக்கம் கேள்விக்குறியாகவே இருந்தது.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அவர் சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்பு இந்தச் செய்தி அவருடைய கவனத்திற்கு வந்து, உடனடியாக அந்தப் பணியில் ஈடுபட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர், அரசு அதிகாரிகளோடு அவர் தொடர்பு கொண்டு, அதற்குப் பிறகு என்னிடத்தில் அதற்குரிய அனுமதியைப் பெற்று மரப்பலகையிலான பாதையை கடலுக்கு அருகில் செல்லக்கூடிய வகையில், கடற்கரையில் சென்று மாற்றுத் திறனாளிகள் காலை நனைக்கலாம் என்ற இதுவரையில் எங்கும் இல்லாத ஒரு மிகப்பெரிய சாதனையை படைப்பதற்கு அவர் துணை நின்றிருக்கிறார். இச்செயல் அவரது பணிகள் எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்ததுபோன்றது ஆகும்.

இந்த 234 தொகுதிகளில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை. நாங்கள் முதன்முதலில் இளைஞரணி தொடங்கியபோது, நம்முடைய இளைஞரணி அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்துவோம். அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற செல்வேந்தரன் வந்திருக்கிறார், நம்முடைய சுப.வீ இருக்கிறார், சிவா இருக்கிறார், அதுபோல் பலர் இங்கு  இருக்கிறீர்கள், நன்னன் அவர் மறைந்துவிட்டார், தொடர்ந்து வந்துவிடுவார்கள். அதுபோன்ற முன்னோடிகளையெல்லாம், கழகச் சொற்பொழிவாளர்களையெல்லாம் நாங்கள் அழைத்துச் சென்று, இரண்டு நாள்கூட நடத்தியிருக்கிறோம், அங்கேயே தங்கி, அங்கேயே சாப்பிட்டுவிட்டு, அங்கேயே தூங்கி, அதற்குப் பிறகு அவர்களை கேள்வி கேட்க வைத்து, இப்படியெல்லாம் நாங்கள் நடத்தினோம். ஆனால் அப்போது நாங்கள் மாவட்டம் மாவட்டமாக நடத்தினோம். 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஆனால், இப்போது தம்பி உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்டதற்குப் பிறகு, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக எடுத்து 234 இடங்களில் இந்த பயிற்சிப் பாசறை கூட்டத்தை இன்றைக்கு நடத்தி முடித்திருக்கிறார் என்று சொன்னால், உள்ளபடியே அவர் ஆற்றிக் கொண்டிருக்கும் பணிகளுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல இந்த சாதனை நடந்திருக்கிறது என்பதை நான் பெருமையோடு சொல்ல விரும்புகிறேன். 

நம்முடைய இயக்கம் என்பது பேசிப்பேசி வளர்ந்த கட்சி. அப்போதெல்லாம் கிராமங்கள், குக்கிராமங்களில் கூட்டம் போடுவோம். திண்ணையில் உட்கார்ந்து பிரச்சாரத்தை நடத்துவோம். ஆனால் இன்றைக்கு நவீன காலமாக மாறிக் கொண்டிருக்கும் காரணத்தால், அவைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்துகொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், கலைஞர் போகாத ஊரே இருக்காது. கலைஞர் கால்படாத கிராமமே இருக்காது. சிவாதான் அடிக்கடி சொல்வார், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகளைப் பார்த்தால் அதில் பெரும்பாலும் தலைவர் கலைஞர் ஏற்றிவைத்த கொடியாகத்தான் இருக்கும், அதற்கடுத்து, இளைஞரணி செயலாளர் மு.க.ஸ்டாலின் ஏற்றிவைத்த கொடியாகத்தான் இருக்கும் என்று அவர் அடிக்கடி சொல்வார், உண்மைதான்.  அப்படியெல்லாம் அந்தப் பணிகளில் நாம் ஈடுபட்டோம். 

1967-ஆம் ஆண்டு நாம் முதன்முதலில் ஆட்சிக்கு வந்தோம், முதலில் அண்ணா தலைமையில். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதன்முதலில் திமுக தொடங்கியது 1949-ல்.  திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கியவுடனே ஆட்சிக்கு வந்துவிடுவோம், இன்றைக்கு தொடங்குகிற கட்சியெல்லாம் ஆட்சிக்கு நாளைக்கே வந்துவிடுவோம் என்று சொல்லிவிட்டுத்தான் கட்சியை தொடங்குகிறார்கள். ஆனால் திமுக அப்படியல்ல. முதன்முதலில் 1957-ல் தேர்தல் களத்தில் நின்று
சட்டசபையில் 15 இடங்களில் வெற்றி பெற்றோம். அதற்குப் பிறகு 1962-ல் 50 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுகிறோம்.  அதைத் தொடர்ந்து 1967-இல் அண்ணா தலைமையில் ஆட்சிப் பொறுப்பு ஏற்கிறோம் முதன் முதலாக.  அந்த தேர்தல் களத்தில் ஈடுபட்டபோது, அண்ணா சொல்கிறார், நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பொருளாளர், பொருளாளராக இருக்கக்கூடிய தலைவர் கலைஞரிடத்தில் அண்ணா கேட்கிறார், ”எல்லா தொகுதிகளிலும் போட்டி போடவேண்டும் என்று சொல்கிறீர்களே, அதற்கு பணம் வேண்டாமா? நிதி வேண்டாமா? தேர்தலுக்கு செலவு வேண்டாமா? டீ குடிப்பதற்கு காசு வேண்டாமா?” என்று கேட்டார். “எவ்வளவு வேண்டும் என்று கேட்டார்? கலைஞர்”. 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஒரு பத்து லட்சம் இருந்தால் போதும் என்று விளையாட்டாகச் சொன்னார். ”பத்து லட்சம்தானே, நான் கொண்டுவந்து தருகிறேன்” என்று சொல்லி, தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார் கலைஞர். நாடகம் போடுகிறார், கூட்டம் பேசுகிறார், வீதியில் இறங்கிக் கொடியேற்றுகிறார், ஒவ்வொரு கட்சித் தோழர் வீட்டிற்கும் போய் காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு சாப்பிடுகிறார். ஆக, சாப்பிடுவதற்கு காசு. இப்படி 5000, 2000, 3000, 4000, 10000 ரூபாய் என்று ஆங்காங்கு சென்று திரட்டித்திரட்டி, அண்ணா சொன்னதை நிறைவேற்ற வேண்டுமென்று முடிவு செய்து அந்த நிதியை திரட்டிக்கொண்டு விருகம்பாக்கத்தில் மாநாடு நடைபெறுகிறது. எல்லா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள். ராஜாஜி உட்கார்ந்திருக்கிறார், காயிதே மில்லத் உட்கார்ந்திருக்கிறார், மூக்கையா தேவர் உட்கார்ந்திருக்கிறார், எல்லா கட்சித் தலைவர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

அந்தக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் பேசுகிறபோது சொல்கிறார், ”அண்ணா, தேர்தல் களத்தில் ஈடுபட வேண்டுமென்றால், நிதி தேவை, கட்சித் தோழர்களுக்கு பணியாற்றுவதற்கு, டீ குடித்து வேலை செய்வதற்கு நிதி தேவை, நான் உணர்ந்தேன். நான் உங்களிடத்தில் 10 லட்சம் ரூபாய் கொண்டு வந்து தருகிறேன் என்று ஒரு உறுதி தந்தேன் என்று சொல்லி, 10 லட்சம் அல்ல, 11 லட்சம் திரட்டியிருக்கிறேன், இந்தாருங்கள்” என்று ஒப்படைத்தார்.

அந்த 11 லட்சம் நிதியை அண்ணா வாங்கிக் கொண்டு, அந்த மாநாட்டு மேடையில் பேசுகிறார், பேசி கடைசியாக, எப்போதுமே பேசி முடித்துதான் அண்ணா அவர்கள் வேட்பாளர் பட்டியலை அறிவிப்பார். எல்லா வேட்பாளர் பட்டியலும் அறிவித்தாகிவிட்டது, கடைசியாக சைதாப்பேட்டை மட்டும் balance நிற்கிறது. கடைசியில் அவர் சொல்கிறார், சைதாப்பேட்டையில் தலைவர் கலைஞர் பெயரைச் சொல்லவில்லை, சைதாப்பேட்டையில் Mr. 11 லட்சம், அப்படியென்று அறிவித்தார். இது வரலாறு. 

இதை எதற்காக சொல்கிறேனென்றால், இதில் எனக்கும் ஒரு உரிமை இருக்கிறது. என்னவென்று கேட்டால், இப்போது நீங்கள் இளைஞரணியில் இருக்கிறீர்கள், உங்கள் இளைஞரணி அலுவலகம் அன்பகம். அந்த அன்பகம் கட்சியின் பெயரில் இருக்கிறது, பொதுச் செயலாளர் பெயரில் இருக்கிறது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. அண்ணா அறிவாலயம் கட்டப்படுவதற்கு முன்னால் கட்சியினுடைய தலைமை அலுவலகம் அன்பகம்தான், அதற்கு முன்பு அறிவகம்,  அதற்குப் பிறகு சென்னை சட்டமன்ற கட்சியினுடைய அலுவலகத்தில் இடையில் இருந்தோம், அதை தூக்கிப் போட்டார்கள்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அந்தப் பிரச்சனையெல்லாம் பேச விரும்பவில்லை. அதற்குப்பிறகு அன்பகத்தில்தான் இருந்தோம். அண்ணா அறிவாலயம் கட்டியதற்குப் பின்னால், அன்பகத்திலிருந்து shift ஆகி இங்கு வந்தோம், கட்சியினுடைய தலைமைக் கழகம் வந்தது. அப்படி வந்ததற்குப் பிறகு அந்த இடத்தில் ஒரு பிரச்சனை வந்தது, யாருக்கு அதை பயன்படுத்துவதற்கு உரிமையைக் கொடுக்கலாம் என்று, தலைமையில் தலைவரும், பொதுச் செயலாளரும், பொருளாளர் ஆற்காட்டாரும் கலந்துபேசிக் கொண்டிருக்கிறார்கள். 

அப்போது தொழிலாளர் அணி கேட்கிறது, மாணவரணியும் கேட்டது. இளைஞரணியில் சார்பில் நானும் சென்று கேட்டேன். தலைவர் சொன்னார், நான் உன்னிடம் கொடுத்தால் பிள்ளைக்கு அப்பா கொடுத்துவிட்டார் என்று கெட்ட பெயர் வந்துவிடும். நான் வேண்டுமானால், உங்களுக்கு ஒரு போட்டி வைக்கிறேன், அக்கட்டடம் வேண்டும் என்று சொன்னால், கட்சிக்கு 10 லட்சம் ரூபாய் நிதியைக் கொடுங்கள், யார் முதலில் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு இல்லை, அவர்கள் அன்பகத்தைப் பயன்படுத்துவதற்கு நான் அனுமதி தருகிறேன் என்று சொன்னார். சரி என்று அந்தப் போட்டியை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். அன்றிலிருந்து ஒரு நான்கைந்து மாதத்திற்கு நான் பயணத்தைத் தொடங்கினேன்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தலைவர் மாதிரியே செய்தேன், கொடியேற்றுவதற்கு காசு 2000, பொதுக்கூட்டத்திற்கு 5000, வீட்டில் போய் மதிய உணவு சாப்பிட்டால் அதற்கு 2000, இரவு சாப்பிடுவதற்கு 1000, காலை டிபன் செய்தால் 500, வீட்டில் வந்து திண்ணையில் உட்கார வேண்டுமா 200, குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென்றால் 100 ரூபாய், இப்படி திரட்டினோம். திரட்டிக் கொண்டுவந்து தலைவரிடத்தில் சொன்னோம், தலைவர் கலைஞர் அவர்களே, அண்ணாவிடத்தில் 10 லட்சம் சொல்லி, 11 லட்சம் கொடுத்தீர்கள், இந்தாருங்கள், நான் உங்களிடத்தில் 10 லட்சம் சொல்லி, இப்போது 11 லட்சம் நாங்கள் கொடுக்கிறோம் என்று கொடுத்தேன். அதற்குப் பிறகுதான் எங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டது.  நான் செயலாளராக இருந்தபோது அந்தப் பொறுப்பையேற்றேன். இப்போது தம்பி உதயநிதி அந்தப் பொறுப்பையேற்று அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். 

 உங்களையெல்லாம் நான் அன்போடு கேட்டுக்கொள்ள விரும்புவது, இன்றைக்கு இளைஞர்களாக இருக்கக்கூடியவர்கள், திராவிட மாடல், திராவிட மாடல் என்று இன்றைக்கு நாம் முழங்கிக் கொண்டிருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படியிருந்தது?  ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்நாடு எப்படியிருந்தது?  திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு எப்படி மாறியது? அதற்காகப் பாடுபட்ட, குரல்கொடுத்த திராவிட இயக்கத்தின் தலைவர்கள் இந்த வரலாறுகளையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும், உங்கள் மனதில் ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிறகு இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு அதை நீங்கள் கற்றுத் தரவேண்டும். அதற்காகத்தான் இப்படிப்பட்ட பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

இங்கே உதயநிதி பேசுகிறபோது சொன்னார், 234 தொகுதிகள் முடித்திருக்கிறோம். கடந்த பொதுக்குழுவில் நான் பேசுகிறபோது சொன்னேன், ஒரு வேண்டுகோள் வைத்தேன், வேண்டுகோள் அல்ல, ஒரு கட்டளையே பிறப்பித்தேன், இதைத் தொகுதிவாரியாக மட்டும் முடித்துவிடாதீர்கள், உடனடியாக ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக, பேரூர் வாரியாக, நகரம் வாரியாக இதை நீங்கள் நடத்துங்கள் என்று உத்தரவிட்டிருக்கிறேன். அந்தப் பணியை நிச்சயமாக நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது. 

ஏற்கனவே அண்ணா தலைமையில், கலைஞர் தலைமையில் ஆட்சியில் இருந்தோம். அவர்கள் ஆட்சியில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சாதனைகள், அதைத் தொடர்ந்து இன்றைக்கு அவர்கள் வழிநின்று ஆட்சி நடத்தக்கூடிய நாம் நடத்திக் கொண்டிருக்கும் சாதனைகள், இவையெல்லாம் மக்களுக்குப் போய் சேர்ந்திட வேண்டும். எதற்காக இதை வலுப்படுத்தி, கட்டாயப்படுத்தி சொல்கிறேனென்றால், இன்றைக்கு பார்க்கிறோம்.  முன்பெல்லாம் வானொலியில்தான் செய்திகளைக் கேட்போம்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அது மாறி பத்திரிகைகள் வர ஆரம்பித்தது, காலையிலும், மாலையிலும் பத்திரிகை படிக்கிறோம், அதில் செய்திகளைப் படிப்போம். அது படிப்படியாக குறைந்து டி.வி. வந்தது. பத்திரிகைகளில் வருவதற்கு முன்பு டி.வி.யில் செய்தி வந்துவிடும், காலையில்தான் பத்திரிகை வரும், ஆனால் முன்தினம் இரவே Flash News  என்று போட்டு வந்துவிடும். இப்போது அதையும் தாண்டி கையிலேயே வந்துவிட்டது. whatsApp என்று சொல்கிறோம், facebook என்று சொல்கிறோம். Youtube என்று சொல்கிறோம். Twitter என்று சொல்கிறோம், Instagram என்று சொல்கிறோம். Telegram என்று சொல்கிறோம். இப்படி நவீன வகையில் பிரச்சாரங்கள்.

அதுவும் அதைப் பயன்படுத்திக்கொண்டு, நாம் வளர்வதைத் தடுப்பதற்கு, நம்மை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு ஒரு பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. அதை நாம் முறியடிக்க வேண்டுமென்று சொன்னால், அது உங்களால்தான் முடியும் என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது.  

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

|அதற்காகத்தான் முரசொலி பாசறை பக்கம், அதேபோல் திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியினுடைய செயலி, இதுபோன்று பல. முரசொலியில் பாசறை பக்கத்தை இன்றைக்கு தொடங்க இருக்கிறோமென்று சொன்னால், கலைஞருடைய மூத்த பிள்ளை எது என்று கேட்டால், முரசொலிதான், அவரே பலமுறை சொல்லியிருக்கிறார்.  அந்த முரசொலியை பயன்படுத்திக்கொள்ள தலைமைக் கழகத்தின் சார்பில் நாங்கள் இளைஞரணிக்கு அனுமதி தந்திருக்கிறோம். அதை முறையாக பயன்படுத்திக்கொண்டு நாள்தோறும் ஒரு பக்கம் ஒதுக்கப்படுகிறது.

அப்படி ஒதுக்கப்படக்கூடிய அந்த பக்கத்தில், அந்த பாசறையில் உதயநிதி சொன்னதுபோல, பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள், பேராசிரியர் சுப.வீ அவர்கள், வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், கோவி. லெனின் அவர்கள், டாக்டர் எழிலன் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா அவர்கள் போன்றவர்கள், இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பயன்படுத்திக்கொண்டு தொடர்ந்து அதில் எழுதவைத்து, அதில் சில தலைப்புகள் கூட சொன்னார்கள், இடம்- இயக்கம், கலைஞரும் நானும், இடம் பொருள் கலைஞர் ஆகிய பகுதி இடம்பெறுகிறது என்று அந்த விளம்பரத்தை என்னிடத்தில் காண்பித்தார்கள். அதை முறையாக நீங்கள் பயன்படுத்திக்கொண்டு, சிறப்பாக அந்த கடமையை நிறைவேற்றித் தரவேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். 

இன்னும்பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்பதுபோன்று இருக்கிறது உங்களைப் பார்க்கும்போதெல்லாம். ஏனென்றால் அவ்வளவு அனுபவம், அவ்வளவு பெரிய வரலாறு எனக்கே இருக்கிறது என்றால், நம்முடைய முன்னோடிகளுக்கு, நம்முடைய தலைவர்களுக்கு எவ்வளவு அனுபவம் இருக்கும். 

ஆனால், கோட்டையிலே பல பணிகள் காத்திருக்கிறது. இன்றைக்கு அரசு விடுமுறைதான். இருந்தாலும், நான் போகிறேன். அதனால் நீண்ட நேரம் உங்களிடத்தில் பேச முடியவில்லை. பழைய மாதிரி இருந்தால், இளைஞரணி நிகழ்ச்சி என்றால், கடைசி வரையில் இருந்துவிட்டுதான் நான் போவேன். ஆனால் இன்றைக்கு அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.  இளைஞரணியை முதன்முதலில் நாங்கள் குடியிருந்த கோபாலபுரம் பகுதியில் தலைவரோடு குடியிருந்த   நேரத்தில் கோபாலபுரம் பகுதியில்தான் முதன்முதலில் தொடங்கி வைத்தோம், நான் பலமுறை சொல்லியிருக்கிறேன்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

பேராசிரியருடைய நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசுகிறபோது குறிப்பிட்டேன். தலைவரும், பேராசிரியரும் வீட்டிலிருந்து கிளம்பி நடந்தே இரண்டு கிலோமீட்டர் கோபாலபுரம் 4-வது தெருவின் முனையில் ஒரு barber shop கடையில்தான் முதன்முதலில் இளைஞர் திமுக கோபாலபுரம் இளைஞர் திமுக தொடங்கினோம். அப்போது 70 ரூபாய் வாடகை.  ரிப்பனைக் கட்டி கத்திரிக்கோல் எடுத்து தலைவரிடத்தில் கொடுத்தோம், தலைவர், “நான் திறக்க மாட்டேன், பேராசிரியர் திறக்கட்டும்” என்று அவர் கையில் கொடுத்தார்,  பேராசிரியர்தான் திறந்து வைத்தார்.  அப்படி திறந்த அந்த இளைஞர் திமுக அமைப்பின் சார்பில் பல நிகழ்ச்சிகளை நடத்தினோம்.

அண்ணா பிறந்தநாள் கலைஞர் பிறந்தநாள், பொங்கல் விழா, இப்படி பல நிகழ்ச்சிகளை அங்கு நடத்திக்கொண்டே இருப்போம்.  அதற்கு எத்தனையோ தலைவர் வந்திருக்கிறார்கள், நம்முடைய கூட்டணியில் இருந்தபோது, சுதந்திரா கட்சியில் இருந்தபோது ராஜாஜி வந்திருக்கிறார், அப்துல் சமத் வந்திருக்கிறார், எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார்,- இப்படி பல தலைவர்கள் நிகழ்ச்சிகளுக்கு வந்திருக்கிறார்கள் தலைவர் வந்திருக்கிறார். 

அண்ணா அவர்களது பிறந்தநாளை நடத்துவதற்காக அண்ணாவினுடைய மணிவிழா அப்போது வருகிறது. அவரிடத்தில் தேதி கேட்கவேண்டும் என்று சொல்லி அவர் வீட்டிற்கு சென்று பார்க்கப் போனால், உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் மாடியில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கீழே ஹாலில் ராஜாராம், என்.வி.என்., ஆசைத்தம்பி போன்ற முன்னோடிகளெல்லாம்  உட்கார்ந்திருக்கிறார்கள். தலைவர் இருந்தால் ஏதாவது திட்டுவார் என்பதற்காக தலைவர் இல்லாதபோது நாங்கள் அங்கு போனாம்.  அண்ணாவை பார்க்க வேண்டுமென்று சொன்னோம். முடியாது, உடம்பு சரியில்லை, படுத்துக் கொண்டிருக்கிறார், போங்கள் என்று சொன்னார்கள், சரி என்று நான் கிளம்பி வந்துவிட்டேன். இந்தச் செய்தி அண்ணா அவர்களுக்கு கிடைத்துவிட்டது. 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கலைஞர் மகன் வந்தான் என்று யாரோ சொல்லிவிட்டார்கள்.  ஏன் திரும்பி அனுப்பிவிட்டீர்கள் என்று கேட்டிருக்கிறார். இல்லை, உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிட்டோம். உடனே அழைத்து வாருங்கள் என்று சொல்லி அவர் கார், 7007 நன்றாக ஞாபகம் இருக்கிறது, மஞ்சள் கார், Government கார், அந்தக் கார், அவருடைய டிரைவர் சண்முகம், இப்போது இல்லை, சமீபத்தில் இறந்துவிட்டார். நான் வீட்டிற்கு வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன், கார் கோபாலபுரத்தில் வந்து நிற்கிறது. என்னவென்று பார்த்தால், அண்ணா அழைத்துக் கொண்டு வரச் சொல்கிறார், வாப்பா, வாப்பா என்றுதான் டிரைவர் கூப்பிடுவார், வாப்பா என்று கூப்பிட்டார்.

சரியென்று காரில் அவரது இல்லத்திற்கு சென்றேன். அப்போது அண்ணா படுத்திருந்தார். என்னவென்று கேட்டார், ஏன் வந்தாய், போய்விட்டாயே என்ன என்று கேட்டார்.  உங்களிடம் தேதி கேட்க வந்தேன், கீழே இருந்தவர்கள், உங்களை பார்க்க முடியாது, உடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் கிடக்கிறான், விடு, என்ன விஷயம் என்று சொல் என்றார்.  

“தேதி வேண்டும்.” 

 “எதற்கு?” 

“உங்கள் மணிவிழா.” 

“எங்கு நடத்தப் போகிறாய்?”

 “கோபாலபுரத்தில்.” 

“உங்கப்பாவிற்கு தெரியுமா?”

 “தெரியும்.” 

“சரி தரேன்.” 

“இல்லை, இப்போதே கொடுங்கள்,” 

“என்ன உங்கப்பனை மாதிரி பிடிவாதக்காரனாக இருக்கிறாய்,” இப்படியே கேட்டார். 

அதற்குப் பிறகு, “தரேன், போ” என்று அனுப்பினார். தேதியும் கொடுத்தார். ஆனால், உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அமெரிக்காவுக்கு உடனடியாக  செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். 

அதற்குப் பிறகு வந்தார், வந்ததற்குப் பிறகு அதிக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியவில்லை, ஒரே ஒரு நிகழ்ச்சியில் வந்து கலந்துகொண்டார். எந்த நிகழ்ச்சி தெரியுமா? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டிய விழா. அந்த விழா கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அப்போது Children’s Theatre என்று அதற்குப் பெயர். அங்குதான் அவ்விழா நடைபெற்றது. அப்போது நான் முரசொலியில் வேலை செய்து கொண்டிருந்தோன் 1000 ரூபாய்க்கு. அவருடைய பேச்சை tape பண்ணினோம். அப்போது வீடியோ எல்லாம் கிடையாது.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

Tape செய்வதற்காக கையில் ஒரு tape recorder எடுத்துச் சென்று, அவர் பேசுகிற மேடை, மைக் இதுபோன்று ஸ்டூல் எல்லாம் கிடையாது, வெறும் மைக்தான் இருக்கிறது. அவர் கால்மாட்டில் கீழே உட்கார்ந்துகொண்டு அந்த டேப்பை போட்டு டேப் செய்து கொண்டிருக்கிறேன்.  பேசினார், பேசிக் கொண்டே இருக்கிறார், என்னை இந்த நிகழ்ச்சிக்கு போகக்கூடாது என்று என் குடும்பத்தினர் தடுத்தார்கள், கட்சியினுடைய முன்னோடிகள் போகக்கூடாது என்று கட்டாயப்படுத்தினார்கள், மருத்துவர்கள் போகவே கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

அத்தனையையும் மீறி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன், ஏன் தெரியுமா? தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பெயர் கிடைக்கிறபோது அப்படி பெயர் சூட்டப்படக்கூடிய அந்த விழாவிலே கலந்து கொள்ளவில்லை என்று சொன்னால், இந்த உயிர் இருந்து என்ன பயன்? அப்படியென்று சொன்னவர் அண்ணா. 

இன்றைக்கு யாரோ தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறாரே, நான் கேட்கிறேன்.  அதற்கு மேல் விளம்பரம் கொடுக்க வேண்டாம். எதற்காக சொல்கிறேன் என்று சொன்னால், இதெல்லாம் வரலாறு. அந்த நிகழ்ச்சியை நான் கோபாலபுரத்தில் வந்து அண்ணாவிடத்தில் தேதியைக் கேட்டு அதற்குப் பிறகு நிகழ்ச்சியை நடத்துகிறோம், அது எந்த இடம் தெரியுமா? தலைவருடைய வீட்டிற்கு பக்கத்தில் கிருஷ்ணன் கோயில் இருக்கிறது, உங்களுக்கும் தெரியும்.

அந்த கிருஷ்ணன் கோயிலுக்கு முன்னாடி மேடையை போட்டு மறைத்துவிட்டோம், ஒருநாள், இரண்டு நாள் அல்ல, மூன்று நாள். ஏனென்றால் பெரிய பெரிய தலைவர்கள் வருகிறார்கள், பெரிய மேடை போட வேண்டும். இப்போதெல்லாம் சாதாரணமாக வந்து போட்டுவிடுகிறார்கள், அது வேறு. போட்டுவிட்டு அடுத்த நாள் கழட்டிவிட்டு சென்றுவிடுகிறார்கள், அடுத்த நிமிடமே இப்போது கழட்டி விடுகிறார்கள். அப்போதெல்லாம் அதற்கு கால் போடவேண்டும், அந்த அடிப்படை work எல்லாம் செய்யவேண்டும், strong ஆக போடவேண்டுமென்று மூன்று நாள் மேடை போட்டோம். கோவிலையே மறைத்துவிட்டோம். 

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அதே கோபாலபுரத்தில் 4வது தெருவில் நான்கு வீடு தள்ளி டாக்டர் கிருஷ்ணன் என்று ஒருவர் இருந்தார், இப்போது இறந்துவிட்டார். தலைவருக்கு அவர்தான் டாக்டர். தலைவருக்கு மட்டுமல்ல, எனக்கு, உதயா, அங்கு இருக்கக்கூடிய எல்லா குழந்தைகளுக்கும் அவர்தான் டாக்டர், family டாக்டர். ஸ்டெஸ்தஸ்கோப் வைத்துப் பார்ப்பார்.  எல்லா முடித்துவிட்டு மருந்து, மாத்திரையெல்லாம் எழுதித் தர மாட்டார். ஒரு syrup எடுப்பார், அதை அவரே கலப்பார், கலந்து கொடுத்துவிடுவார், சரியாகிப் போய்விடும். இதுதான் டாக்டர்.  அடிக்கடி தலைவருக்கு B12 injection போட்டுவிட்டு போய்விடுவார். 

அவர் ஒருநாள் இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு ஒருவாரம், நான்கு நாட்களுக்கு முன்பு தலைவரிடத்தில் வந்து சொல்கிறார், என்ன உங்கள் மகன் கிருஷ்ணன் கோயிலை மறைத்து மேடை போட்டு வைத்திருக்கிறான்? நாங்கள் எல்லாம் இந்த முனையிலிருந்து காலில் செருப்பை கழட்டிவிட்டு அங்கிருந்து கும்பிட்டுவிட்டு போய்விடுவோம், உள்ளே வந்து கும்பிட மாட்டோம். ஆனால் இப்படி போட்டு வைத்திருக்கிறானே, இப்போது எங்களுக்கு எவ்வளவு இடைஞ்சலாக இருக்கிறது என்று சொன்னார். அதை தலைவர் கேட்டுக்கொண்டு, சரிசரி, தப்பாக நினைக்காதீர்கள் என்று சமாதானம் செய்து அனுப்பிவிட்டார்.

“இளைஞரணி வரலாற்றை  பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உதயநிதியிடம் இருக்கிறது” : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அனுப்பிவிட்டு மேடையில் வந்து கலைஞர் பேசுகிறார், என் மகன் ஸ்டாலின் இப்படிமேடை போட்டு வைத்திருக்கிறான் என்று என்னுடைய குடும்ப டாக்டர் கிருஷ்ணன் வந்து இன்று complaint செய்தார். ஸ்டாலின் மீது இங்கு இருப்பவர்கள் எல்லாம் கோபமாக இருப்பீர்கள் என்று தெரியும், கலைஞர் பேசுகிறார், என் டாக்டரே வந்து சொன்னார், நான் சொன்னேன் டாக்டரிடம், தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள். ஸ்டாலினுடைய கனவில் கிருஷ்ண பரமாத்மா தோன்றி, எல்லாரும் என்னை ரோட்டிலிருந்தே கும்பிட்டுச் சென்றுவிடுகிறார்கள். ஒரு நான்கு நாளைக்காவது உள்ளே வந்து கும்பிடச் சொல், அதற்காகத்தான் மேடை போட்டுவிட்டான் என்று சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன் என்று சொன்னார். இதெல்லாம் வரலாறு. 

எதற்காகச் சொல்கிறேனென்றால், இப்படிப்பட்ட வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இயக்கம்தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம். அந்தக் கழகத்தினுடைய துணை அமைப்புகளில் ஒன்றான இளைஞரணியும் இந்த வரலாற்றைப் பெற்றிருக்கிறது, அந்த வரலாற்றை பேணிப் பாதுகாக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு தம்பி உதயநிதியிடத்திலே ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. உதயநிதியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னால், உங்களை நம்பி, நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என்ற அந்த உணர்வோடுதான் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. எனவே, அந்தக் கடமையை நிறைவேற்றித் தரவேண்டும் என்று கேட்டு, வாழ்க தமிழ்நாடு! வாழ்க தமிழ்நாடு!

விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.

Related Stories

Related Stories