மு.க.ஸ்டாலின்

"தமிழ்நாட்டுக்கே அவர் ராஜாவா இருக்காரு.." :கொஞ்சும் மொழியில் முதல்வரை புகழ்ந்த பள்ளி சிறுமி - நெகிழ்ச்சி!

"தமிழ்நாட்டுக்கே அவர் ராஜாவா இருக்காரு.." :கொஞ்சும் மொழியில் முதல்வரை புகழ்ந்த பள்ளி சிறுமி - நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.

"தமிழ்நாட்டுக்கே அவர் ராஜாவா இருக்காரு.." :கொஞ்சும் மொழியில் முதல்வரை புகழ்ந்த பள்ளி சிறுமி - நெகிழ்ச்சி!

இந்த விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் கீதா ஜீவன், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் பி.மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவிலேயே முதன்முறையாக ரூ.33.56 கோடியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி காலை உணவை விநியோகிக்கும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"தமிழ்நாட்டுக்கே அவர் ராஜாவா இருக்காரு.." :கொஞ்சும் மொழியில் முதல்வரை புகழ்ந்த பள்ளி சிறுமி - நெகிழ்ச்சி!

இதைத்தொடர்ந்து மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவை மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறியதுடன் அவர்களுக்கு ஊட்டிவிட்டு, அவர்களுடன் அமர்ந்து மகிழ்ச்சியாக உணவு உண்டு மகிழ்ந்தார்.

மேலும் "குழந்தைகளுக்கு சாப்பாடு வையுங்கள்.. சாப்பாடு பிடித்திருக்கிறதா.. நன்றாக இருக்கிறதா..?" என்று நல் விசாரித்தும் மகிழ்ந்தார். அதோடு "நன்றாக சாப்பிடவேண்டும்.." என்று அறிவுரை கூறி அருகிலிருந்த சிறுவர், சிறுமிகளுக்கு உணவூட்டி மகிழ்ந்தார்.

"தமிழ்நாட்டுக்கே அவர் ராஜாவா இருக்காரு.." :கொஞ்சும் மொழியில் முதல்வரை புகழ்ந்த பள்ளி சிறுமி - நெகிழ்ச்சி!

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் முதலமைச்சர் உணவூட்டி மாணவர்கள் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தனர். அதில் ஒரு சிறுமியிடம் செய்தியாளர் ஒருவர் "உன் கூட பேசுனவர் யார்?" என்று கேட்கையில், குழந்தை "முதல்வர் ஸ்டாலின்" என்று பதிலளிக்க.., "அவர் யாரு? தமிழ்நாட்டுக்கு என்னவா இருக்கார்?" என்று செய்தியாளர் மீண்டும் கேட்கையில், "அவர் தமிழ்நாட்டுக்கு ராஜாவாக இருக்கிறார்" என்று சிறுமி பேசியுள்ளார்.

"தமிழ்நாட்டுக்கே அவர் ராஜாவா இருக்காரு.." :கொஞ்சும் மொழியில் முதல்வரை புகழ்ந்த பள்ளி சிறுமி - நெகிழ்ச்சி!

இது தொடர்பான காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்தியாவிலேயே முதல்முறையாக தொடங்கப்பட்ட காலை சிற்றுண்டி உணவு திட்டமானது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்திய அளவில் #TNBreakfast என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

banner

Related Stories

Related Stories