மு.க.ஸ்டாலின்

"90ல் மேடையேறி முழங்கினேன்.. இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன்" -முதல்வருக்கு surprise கொடுத்த பெண் !

மாணவியாக இருந்த போது தி.மு.க மேடை நிகழ்ச்சியில் பேசியதை தற்போது தூத்துக்குடி விமானத்தில் பயணித்த முதலமைச்சர் முன் அதே வீரத்தோடு பேசிய பெண்ணின் பேச்சு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"90ல் மேடையேறி முழங்கினேன்.. இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன்" -முதல்வருக்கு surprise கொடுத்த பெண் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், இந்நாள் எம்.பி.-யுமான ராகுல் காந்தி, கட்சியை பலப்படுத்தவும் மக்களை சந்திக்கவும் 'பாரத் ஜோடோ யாத்ரா' என்று சொல்லப்படும் 'இந்திய ஒற்றுமை பயணத்தை' குமரியில் முதல் காஷ்மீர் வரை 150 நாள் பாதயாத்திரையாக மேற்கொள்கிறார்.

குமரியில் இருந்து தொடங்கும் இந்த பாதையாத்திரை கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.

"90ல் மேடையேறி முழங்கினேன்.. இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன்" -முதல்வருக்கு surprise கொடுத்த பெண் !

இந்த பயணத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு செல்வதற்காக தூத்துக்குடி விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த விமானத்தில் பயணித்த பெண் ஒருவர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சென்று பேசினார்.

"90ல் மேடையேறி முழங்கினேன்.. இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன்" -முதல்வருக்கு surprise கொடுத்த பெண் !

அப்போது அவர், "நான் ஒரு வங்கியின் மேலாளராக தற்போது பணிபுரிந்து வருகிறேன். ஆனால் 1990-ம் ஆண்டு நான் மாணவியாக இருந்த போது ஆயிரம் விளக்கு தொகுதிக்கு நீங்கள் வந்திருந்தீர்கள். அப்போது நான் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நான் பேசினேன். அதை இப்போது உங்களிடம் பேசி காட்டலாமா?" என்று கேட்டார்.

அதற்கு முதல்வர் 'பேசுங்கள்' என்று சொல்ல உடனே அவர் தான் சிறு வயதில் பேசியதை முதலமைச்சர் முன் பேசிக்கட்டினார். அவர் பேசுவதை கண்ட முதல்வர் நெகிழ்ச்சியடைந்து, அந்த பெண்ணுக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

இது தொடர்பான வீடியோவை, எம்.எல்.ஏ-வும், தி.மு.க தகவல் தொழில்நுட்ப செயலரருமான டி.ஆர்.பி ராஜா தனது ட்விட்டேர் பக்கத்தில் வெளியிட்டு, "1990ல் ஒரு மாணவியாக ஆயிரம் விளக்கில் மேடையேறி முழங்கினேன் இன்று மீண்டும் உங்கள் முன் பேசுகிறேன் என்று முதலமைச்சர் முன்னால் நின்று கம்பீரமாக பேசிய இந்த ஆற்றல்மிகு தமிழச்சி திராவிட மாடல் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு. ஒரு பெரிய வங்கியில் அவர் இன்று மேலாளர்!" என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories