மு.க.ஸ்டாலின்

மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதில் உறுதியாக உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் -The Sunday Guardian

மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று சண்டே கார்டியன் ஆங்கில வார இதழ் சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது

மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதில் உறுதியாக உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்  -The Sunday Guardian
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டெல்லி மற்றும் மும்பையில்ஞாயிற்றுக்கிழமை தோறும் வெளியாகும்‘சண்டே கார்டியன்’ ஆங்கில வார இதழில் மூத்த பத்திரிகையாளர் லட்சுமணா வெங்கட் குசி எழுதிய கட்டுரை வருமாறு:-

பொதுவாக; ஆனால் உறுதியாக, தி.மு.க. தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு பிரச்சினைகளின் பொருட்டு மத்திய அரசுக்கு எதிரான ஒரு தளத்தைக் கட்டியமைத்துக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் ஏறிட இந்தப் பிரச்சினைகளே அவருக்குச் சக்தியளித்தன. கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போரில் நிர்வாக மட்டத்தில் மத்திய அரசுடன் நல்ல சமன்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளவேண்டிய மு.க.ஸ்டாலினுக்கு, இது கயிறு மீது கவனமாக நடக்க வேண்டிய செயலைப் போன்றதாகும்.

ஆனால் அதே நேரத்தில் தேர்தல் பரப்புரைக் காலத்தில் அவரது கட்சி எழுப்பிய "நீட் தேர்வு எதிர்ப்பு", "புதிய கல்விக் கொள்கை எதிர்ப்பு" ஆகியவற்றை அவரால் எளிதாக விட்டுவிட முடியாது. அதனால்தான் இவற்றை எளிதாக எடுத்துக்கொண்டு சென்று விடாமல், இந்தப் பிரச்சினைகளைப் பற்றி மத்திய அரசுக்கு எதிராக கடுஞ்சுமையுடன் ஆற்றலுடன் போரிடுகிறது, வாதிடுகிறது. மேலும், மு.க.ஸ்டாலின் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஒரு தீர்மானம் கொண்டு வருவதற்கான விவாதத்தையும் எழுப்பியுள்ளார்.

மோடி அரசின் மக்கள் விரோதப் போக்கை எதிர்ப்பதில் உறுதியாக உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்  -The Sunday Guardian

யூனியன் பிரதேசத்தில் மக்கள் விரோத நடவடிக்கைகள்

இவையெல்லாம் போதாது என்பதுபோல இலட்சத்தீவு பிரச்சினை இப்போது கிளம்பியுள்ளது. தென்னிந்தியாவில் இப்பிரச்சினை மேலும் விளைவுகளை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தில் மக்கள் விரோதச் சட்டங்களைத் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளவர் இத்தீவின் நிர்வாகியாகிய புரோஃபுல் படேல் என்பவராவார். இந்த நிர்வாகியை நீக்க வேண்டும் அல்லது திரும்ப அழைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்ததின் மூலமாக இந்த முரண்பாடான பிரச்சினையிலும் அடியெடுத்து வைத்துள்ளார் மு.க.ஸ்டாலின்.

தற்செயலாக, இந்தத் தீவு தென்னிந்தியப் பகுதிகளுடன்; மிக அதிகமாக கேரளாவுடன் பண்பாட்டுத் தொடர்புகள் கொண்டதாகும். கேரளாவும் தற்போது அச்சிறிய தீவில் எதிர்த்துப் போரிடுகிறது. அத்தீவில் பெரும்பான்மையாக இருக்கிற சமுதாயத்தினரை அயலவர்களாக ஆக்குகின்ற சட்டங்களை / விதிகளை / கட்டுப்பாடுகளை வலிந்து கொண்டு வருகிறார் என படேல் மீது மு.க.ஸ்டாலின் உடனடியாக தனது‘ட்விட்டர்’ மூலமாகக் குற்றஞ்சாட்டினார். "பிரதமரின் அலுவலகம் இப்பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு அவரை அப்பதவியிலிருந்து விடுவிக்க வேண்டும்" என மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதேபோல் அவருடன் கூட்டணியில் இருக்கும் ம.தி.மு.க. தலைவர் வைகோவும் படேலின் செயல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கோவிட்-19 பெருந்தொற்றோடு போராடிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசிடமிருந்து அனைத்து உதவிகளும் தேவைப்படும் நிலையில் மாநிலத்தின் தேவைகளைக் கருத்தில்கொண்டு மு.க.ஸ்டாலின் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

HLL பயோடெக் லிமிடெட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த தடுப்பூசி தயாரிப்பு வளாகத்தை குத்தகைக்கு எடுத்துக் கொள்ளவும், முழுமையாக அதனை இயக்குவதற்கும் மத்திய அரசின் அனுமதியை நேற்று முன்தினம்தான் மு.க.ஸ்டாலின் கோரியிருந்தார்.

தடுப்பூசி உற்பத்தியை தொடங்க மு.க.ஸ்டாலின் நடவடிக்கை

தகுந்த தனியார் துறை உதவியுடன் அந்த மையத்தில் தடுப்பூசி உற்பத்தியை விரைவில் மாநில அரசு தொடங்குமென தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்தார். தடுப்பூசி மையம் செயல்படத் தொடங்கினால் நாட்டின் தடுப்பூசி தயாரிப்பு முயற்சிக்கு இது மேலும் ஊக்கமளிக்கும். தயார் நிலையில் இருக்கும் இந்த உற்பத்தி மையம் செயல்படாமல் உள்ளது. சரியான தனியார் துறையினர் கிடைக்கப் பெறாததும் ஒரு காரணமாகும். தடுப்பூசித் தயாரிப்புக்கு சரியான தனியார்துறை பங்களிப்புக்குத் தாம் ஏற்பாடு செய்யமுடியுமென மு.க.ஸ்டாலின் நம்பிக்கையுடன் கூறினார்.

மத்திய அரசுக்குத் தொந்தரவாகக் கருதப்படுகின்ற பிரச்சினைகளில்- அதுமொழிப் பிரச்சினையானாலும், கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கவேண்டுமென்கிற ஜக்கி வாசுதேவ் பற்றிக் குறை கூறிய மாநில நிதியமைச்சர் தியாகராஜன் விவகாரமானாலும் - தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியான நிலைப்பாட்டுடன் இருக்கிறார். சங் பரிவாரங்களுக்குக் கொள்கையளவில் நெருக்கமானவராகவும், பல விஷயங்களில் பிரதமர் நரேந்திரமோடியின் ஆதரவாளராகவும் சத்குரு காணப்படுகிறார். அவரை முக்கியமானவராகக் கருதத் தேவையில்லை என அமைச்சர் ஒதுக்கிவிட்டார்.

அ.தி.மு.க. அரசின் வழக்குகளை தற்போதைய அரசு ரத்து செய்தது

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் மு.க.ஸ்டாலின் அரசு ரத்து செய்துள்ளது. போராட்டக்காரர்களில் 13 பேர் காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்கள். இதனைத் தொடர்ந்து அந்த ஆலை மூடப்பட்டது. கோவிட்-19க்கு எதிரான அரசின் நடவடிக்கைகளுக்கு வலிமை சேர்க்கும் வகையில் ஆக்சிஜனை மட்டுமே உற்பத்தி செய்திட வேண்டுமென்கிற கடுமையான நிபந்தனையுடன் உச்ச நீதிமன்றம் அண்மையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு உத்தரவிட்டது.

ஸ்டெர்லைட் ஆலையின் நடவடிக்கைகள் மக்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் எதிராக இருப்பதைச் சுட்டிக்காட்டி, போராடியவர்கள் மீது அ.தி.மு.க. அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்திட உத்தரவிட்டிருந்தது. பா.ஜ.க.வால் தொலைவிலிருந்து இயக்கப்பட்ட அ.தி.மு.க. அரசால் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு ரத்து செய்தது. இது மு.க.ஸ்டாலின் அவர்களும் பிற மூத்த அரசியல் தலைவர்களும் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும்.

இவ்வாறு சண்டே கார்டியனில் லட்சுமணா வெங்கட் குசி எழுதியுள்ளார்.

banner

Related Stories

Related Stories