மு.க.ஸ்டாலின்

“செவிமடுக்காத அ.தி.மு.க அரசு; தி.மு.க ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்ட அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“செவிமடுக்காத அ.தி.மு.க அரசு; தி.மு.க ஆட்சியில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களை வஞ்சித்து வருகிறது அ.தி.மு.க அரசு.

இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்துள்ளது பழனிசாமி அரசின் காவல்துறை.

அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்ட அ.தி.மு.க அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இரட்டை வேடம் போடும் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, தேர்தல் காலம் நெருங்கி வருவதால், தான் போட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக நாடகமாடுவது ஒருபுறமென்றால், உரிமைக்காகப் போராடுவோரைக் கைது செய்து கொடுமைப்படுத்தும் படலம் இன்னொரு புறம் அரங்கேறுகிறது.

கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்கள் தங்களுக்கான காலமுறை ஊதியம், பணிக்கொடை, குறைந்தபட்ச ஓய்வூதியம், அரசு ஊழியராக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்ட நிலையில் அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல், கைது நடவடிக்கையை மேற்கொண்டது கண்டனத்திற்குரியது.

உரிமைப்போராட்டம் நடத்துவோருக்கு அன்பான ஒரு வேண்டுகோள். செவிமடுக்காத அ.தி.மு.க அரசுக்கு எதிரான போராட்டங்களை ஒத்திவையுங்கள். உங்கள் கோரிக்கைகள் விரைவில் அமையவிருக்கும் தி.மு.கழக ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories