மு.க.ஸ்டாலின்

“8 மாதம் பொறுத்திருங்கள்; தி.மு.க ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்” - மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி!

தி.மு.க ஆட்சி அமையும் போது, நீட் ரத்து செய்யப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

“8 மாதம் பொறுத்திருங்கள்; தி.மு.க ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்” - மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரை தல்லாகுளம் பட்டாலியன் காவல்குடியிருப்பைச் சேர்ந்த காவல்துறை சார்பு ஆய்வாளரின் மகளான ஜோதிஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கியுள்ளது.

நாளை நீட் தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், மன அழுத்தத்தாலும், அச்சத்தாலும் மாணவி ஜோதிஸ்ரீ துர்கா, இன்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

நீட் தேர்வால் தொடர் உயிரிழப்புகளை தமிழகம் சந்தித்து வரும் நிலையில், ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு.

இந்நிலையில், மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், தி.மு.க ஆட்சி அமையும் போது, நீட் ரத்து செய்யப்படும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவு வருமாறு :

“எல்லாவிதமான அடக்குமுறைகளையும், அநீதிகளையும் எதிர்த்து எழுந்த இனம், நம் தமிழ் இனம். அந்தக் குணம் மாணவர்களுக்கும் அவசியம். போராடினால்தான் வெற்றி என்றால் போராடுவோம். எதிர்த்தால்தான் கதவு திறக்கும் என்றால் எதிர்த்து நிற்போம்.

தைரியமாக இருங்கள். உங்களுக்காகப் போராட நாங்கள் இருக்கிறோம்; தி.மு.க இருக்கிறது; நான் இருக்கிறேன்!

தி.மு.க.,வின் ஆட்சி அமையும் போது, நீட் ரத்து செய்யப்படும். அதுவரையிலும் நீட் தேர்வினால் மருத்துவ வாய்ப்பை இழந்த மாணவர்களுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அவர்கள் பொதுத்தேர்வில் வாங்கிய மதிப்பெண்களின்படி மருத்துவம் படிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் அமையவிருக்கும் தி.மு.க. அரசு உருவாக்கித் தரும்!

எந்தவிதமான சட்டப்போராட்டத்தையும், ஆட்சிப் போராட்டத்தையும் தி.மு.க. அரசு மேற்கொள்ளும்; இது உறுதி! எட்டு மாதங்கள் மட்டும் பொறுத்திருங்கள்; கலங்காதிருங்கள்; விடியல் பிறக்கும்!” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories