மு.க.ஸ்டாலின்

’12 அ.தி.மு.க எம்.பி.,க்களின் முடிவால் இந்தியாவே தெருவில் நிற்கிறது’ - சாட்டையைத் தூக்கிய மு.க ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தின் நிறைவு விழாவில் மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

’12 அ.தி.மு.க எம்.பி.,க்களின் முடிவால் இந்தியாவே தெருவில் நிற்கிறது’ - சாட்டையைத் தூக்கிய மு.க ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தமிழகத்தில் தி.மு.க சார்பில் மாபெரும் பேரணி நடைபெற்றது. அதனையடுத்து, தற்போது சி.ஏ.ஏ-வுக்கு எதிராக மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் ஆதரவு எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2ம் தேதி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தனது கையெழுத்தை முதலில் பதிவிட்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் வீதி வீதியாகச் சென்று மக்களிடம் கையெழுத்தைப் பெற்று வருகிறார்.

இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.கவினர் மற்றும் தோழமைக் கட்சியினர் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கொளத்தூரில் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தை ஓட்டேரி பகுதியில் இன்று நிறைவு செய்து வைத்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

’12 அ.தி.மு.க எம்.பி.,க்களின் முடிவால் இந்தியாவே தெருவில் நிற்கிறது’ - சாட்டையைத் தூக்கிய மு.க ஸ்டாலின்

அதன் பிறகு, மக்கள் முன்னிலையில் நடைபெற்ற சி.ஏ.ஏ எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய அவர், “கையெழுத்து இயக்கப் போராட்டத்தை மக்கள் மத்தியில் இசையின் மூலமாக எடுத்துச் சென்ற கானா பாலா மற்றும் ‘தெருக்குரல்’ அறிவு ஆகிய இருவருக்கும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் கொடுமையான சட்டமாக இருக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கவேண்டும் என நாடாளுமன்றத்தில் தி.மு.க உறுப்பினர்கள் பேசியதை பா.ஜ.க அரசு ஏற்கவில்லை. பெரும்பான்மை உள்ளதால் மக்களவையில் சட்டத்திருத்தங்களை மேற்கொண்ட பா.ஜ.க அரசால் மாநிலங்களவையில் அதனைப் பயன்படுத்த முடியவில்லை. ஆகையால் கூட்டணி கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு சட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

தமிழகத்தில் இருந்து 12 பேர் அ.தி.மு.கவை சேர்ந்தவர்கள் இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் விளைவாக இந்தியாவே வீதியில் இறங்கிப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் அ.தி.மு.கவினர் துரோகம் செய்துள்ளனர்.

’12 அ.தி.மு.க எம்.பி.,க்களின் முடிவால் இந்தியாவே தெருவில் நிற்கிறது’ - சாட்டையைத் தூக்கிய மு.க ஸ்டாலின்

மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் எனும் மோடியின் வாக்குறுதி காற்றில் பறந்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, விவசாயப் பிரச்சினை, பொருளாதார சரிவு போன்றவற்றை திசை திருப்புவதற்காக மத்திய அரசு பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்து நாடகமாடி மக்களை திசை திருப்புகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மக்கள் கடுமையாக எதிர்ப்பதன் விளைவாகத்தான் இரண்டு கோடி பேரின் கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. சிலர் இதையும் விமர்சனம் செய்கிறார்கள். ஆனால், நாம் அவர்களுக்கும் சேர்த்தே போராடுகிறோம். ஓரிரு நாட்களில் இந்திய குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கையெழுத்து பிரதிகளை ஒப்படைத்து குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க வலியுறுத்தி கோரிக்கை வைக்க இருக்கிறோம்.” என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories