மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 46வது நினைவு நாள்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தந்தை பெரியாரின் 46வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் அவரது திருவுருவப் படத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 46வது நினைவு நாள்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 46வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் பெரியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள அவரது சிலையும், திரு உருவப்படமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தந்தை பெரியாரின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது வீர வணக்கம், வீர வணக்கம்... தந்தை பெரியாருக்கு வீரவணக்கம்! என தொண்டர்கள் முழக்கமிட்டனர்.

தந்தை பெரியாரின் 46வது நினைவு நாள்: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

தி.மு.க பொருளாளர் துரைமுருகன், முதன்மைச்செயலாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மாவட்டச் செயலாளர்கள் ஜெ.அன்பழகன், சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகளும் பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

banner

Related Stories

Related Stories