மு.க.ஸ்டாலின்

மக்கள் வாழ்வை கெடுக்கும் அமைச்சராக உள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மு.க.ஸ்டாலின் சாடல்!

டெங்கு காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அதிமுக அரசு உள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மக்கள் வாழ்வை கெடுக்கும் அமைச்சராக உள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மு.க.ஸ்டாலின் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மக்களை வாட்டி வதைக்கும் அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அறைகூவல் விடுத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் திமுக நிர்வாகியான வழக்கறிஞர் காசிவிஸ்வநாதனின் இல்லத்திருமண விழா நடைபெற்றது. இந்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுப்பிரமணியன் - பிரதீபா தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மக்கள் வாழ்வை கெடுக்கும் அமைச்சராக உள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மு.க.ஸ்டாலின் சாடல்!

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கி பேசிய மு.க.ஸ்டாலின் சீர்திருத்த திருமணங்கள் மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். அதிமுக ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை மக்களை கொடுமைப்படுத்தும் துறையாக மாறிவிட்டது எனக் கூறினார்.

தமிழகத்தில் டெங்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தாமல் அதிமுக இருக்கிறது என மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் துணையோடு குட்கா புகையிலை பொருட்கள் தங்குத்தடையின்றி விற்பனை செய்யப்படுவதாகவும், பள்ளி, கல்லூரிகள் அருகே தாராளமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

மக்கள் வாழ்வை கெடுக்கும் அமைச்சராக உள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் - மு.க.ஸ்டாலின் சாடல்!

அக்கிரம, அநியாய ஆட்சியே தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அறைகூவல் விடுத்த மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத் தேர்தலை போன்று சட்டமன்ற பொதுத்தேர்தலிலும் திமுக மகத்தான வெற்றியை பெரும் என அவர் தெரிவித்தார்.

திமுக ஆட்சி அமைந்ததும், அதிமுகவில் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories