மு.க.ஸ்டாலின்

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

இடைத்தேர்தல் வெற்றியை கவனமாக அறுவடை செய்யுமாறு உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விளைந்துவரும் வெற்றியை, விரைந்து பணியாற்றி அறுவடை செய்வீர் என உடன்பிறப்புகளுக்கு மடல் வரைந்துள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அந்த மடல் பின்வருமாறு :

“நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல்

உதயசூரியன் தன் இளங்கதிர்களால் பூமிக் குழந்தையைக் கையில் ஏந்துகிற காலைப்பொழுதில் இடைத்தேர்தல் களத்தில் நடைப்பயிற்சி போல, மக்களைச் சந்தித்து வாக்குகளை சேகரிக்கும்போது, உங்களில் ஒருவனான என்னை, “நீ, எங்களில் ஒருவன்’ என்று உறுதியளித்து பாசமும் அன்பும் காட்டி ஆதரவுக்கரம் நீட்டி, வாக்காளப் பெருமக்கள் தரும் நம்பிக்கை மகிழ்ச்சி அளிக்கிறது.

இடைத்தேர்தல் காண்கின்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான விக்கிரவாண்டி தொகுதியின் கழக வேட்பாளர் புகழேந்தியுடனும் மாவட்டக் கழகச் செயலாளர் பொன்முடி, தொகுதிச் செயலாளராக ஜெகத்ரட்சகன் மற்றும் நிர்வாகிகளுடனும் மக்களைச் சந்திக்க ஆயத்தமாகி வரும் வேளையில், உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

“உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” என்பதுதான் பொதுமக்களிடம் நான் வைக்கும் பணிவன்பான வேண்டுகோள்.

அகத்தை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பதுபோல, பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தலையசைக்கிறார்கள். “வணக்கம்” சொல்லி வாழ்த்துகிறார்கள். “கை” கொடுக்கிறார்கள். செல்ஃபி எடுத்துக் கொள்கிறார்கள். வாயார வாழ்த்துத் தெரிவிக்கிறார்கள்.

நமக்கு நல்ல நம்பிக்கை ஊட்டுகிறது; அவர்களிடமிருந்து வெளிப்படும் ஆரவாரமான ஆதரவும் அசைக்கமுடியாத தீர்மானமும்.

அக்டோபர் 21ல் இடைத்தேர்தல் காண்கிற நாங்குநேரி - விக்கிரவாண்டி தொகுதிகளில் தொடர்ச்சியான பரப்புரையை மேற்கொண்டிருக்கிறோம்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

பொதுக்கூட்டம், வேன் பிரச்சாரம் இவையல்லாம் தேர்தலில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகள்தான் எனினும், உங்களில் ஒருவனான நான் மிகவும் விரும்புவது திண்ணைப் பிரச்சாரத்தைத்தான். காரணம், அது வெறும் பரப்புரை அல்ல; சொற்பொழிவு அல்ல; நம்மை நம்பி வாக்களிக்கும் பொதுமக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை முகத்துக்கு முகம், இதயத்துக்கு இதயம் அறிந்துகொள்ளக்கூடிய நேரடியானதும் நெருக்கமானதுமான உரையாடல்.

மக்களின் மன ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை, அந்த உரையாடலின் போது - அவர்கள் வெளிப்படுத்தும் தமிழ்மொழியில் மட்டுமல்ல, அவர்களின் உடல்மொழியிலும் பார்க்க முடியும்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

நாங்குநேரி தொகுதியில் மேற்கொண்ட திண்ணைப் பிரச்சாரத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்காக மாவட்டக் கழகச் செயலாளர் ஆவுடையப்பன், தொகுதிப் பொறுப்பாளர் - கழகத் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகளுடனும், காங்கிரஸ் இயக்கத்தாருடனும் தோழமைக்கட்சிகளின் தோழர்களுடனும் ஈடுபட்டபோது, மக்கள் தாமே முன்வந்து காட்டிய பேராதரவு, திண்ணமான தெம்பையும் திடமான நம்பிக்கையையும் அளித்தது.

தமிழ்நாட்டில் நடைபெறும் அவலகரமான - அடிமைத்தனமான ஆட்சிக்குப் பாடம் புகட்ட தங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருப்பதாக வாக்காளர்கள் நிச்சயமாக நம்புகிறார்கள். அதற்கான நாளினை எதிர்பார்க்கிறார்கள்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

அந்த எதிர்பார்ப்பின் மிகுதியினால், “இன்னும் இந்த எடுபிடி ஆட்சியை ஏன் விட்டு வைத்திருக்கிறீர்கள்?” என்று உரிமையுடன் கோபப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

தி.மு.கழகம் எப்போதும் ஜனநாயக வழியில் செயல்படும் இயக்கம் என்பதையும், அந்த உணர்வைத்தான் பேரறிஞர் அண்ணா அவர்களும் தலைவர் கலைஞர் அவர்களும் எப்போதும் நமக்கு ஊட்டி வளர்த்திருக்கிறார்கள் என்பதையும் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது; அவர்கள் அதைப் புரிந்துகொள்கிறார்கள். அதேநேரத்தில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டாக வேண்டும் என்பதில் நம்மைவிட அவர்கள் ஆர்வமாகவும் முனைப்பாகவும் இருக்கிறார்கள்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

அடிப்படை வசதிகளைக்கூட செய்து தர முடியாத ஓர் ஆட்சி, தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. மூன்றாண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. சாலை, தெருவிளக்கு, குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம் எதுவும் சரியாக இல்லை. நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்களுக்காகப் போய் நின்றால், ‘இன்று போய் நாளை வா’ என்ற பதிலே கிடைக்கிறது.

முதியோர் உதவித்தொகை கிடைப்பதில்லை. ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித்திட்டம் முடக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தப் பணியையும் செய்யாமல் கமிஷன்-கலெக்ஷன்- கரப்ஷன் என்பது மட்டுமே ஆட்சியாளர்களின் ஒரே செயல்பாடாக இருக்கிறது.

திண்ணைப் பிரச்சாரத்தின்போது சந்தித்த மக்கள், தாங்கள் படும் துன்பங்களை எடுத்துச் சொன்னார்கள். தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்தார்கள். மனுவாகக் கொடுத்தார்கள்.

தி.மு.கழகத்தின் ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கான ஆதரவை உறுதி செய்தார்கள். தமிழ்நாட்டை மீட்பதற்கு தி.மு.கழகம்தான் ஒரே நம்பிக்கை என்பதையும் வெளிப்படுத்தினார்கள்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

புதிய வாக்காளர்கள், பெண்கள், இளைஞர்கள், மூத்தவர்கள் என்ற பாகுபாடின்றி அனைத்துத்தரப்பு மக்களும் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

நாங்குநேரி தொகுதியில் ஒரு பெரியவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, “உங்கள் அப்பா கலைஞர்தான் என் வீட்டைத் திறந்து வைத்தார். அப்போது அவரது கையைப் பிடித்துக்கொண்டேன். அதே உணர்வுடன் இப்போது உங்கள் கைகளைப் பிடித்துக்கொள்கிறேன்” என்று அன்பு ததும்ப-பாசம் பொங்கச் சொன்னார்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளியான செல்லப்பன் என்ற இளைஞர், “எங்களைப் போன்ற மாற்றுத்திறனாளிகளுக்காக கலைஞரய்யா எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறார். உரிமைகள் தந்திருக்கிறார். உங்கள் கைகளால்தான் நான் பட்டம் வாங்கினேன். நிச்சயமாக உங்கள் கைகளால் பணி நியமன உத்தரவையும் பெறுவேன். அதற்கான காலம் விரைவில் வரும்” என்று நம்பிக்கை ஒளியுடன் சொன்னார்.

அந்த இளைஞர் தன் மீதான நம்பிக்கையில் மட்டும் அந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. நம் உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக் கொடி தாங்கிய இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்துச் சொல்லியிருக்கிறார்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

ஓர் இளைஞர் மட்டுமல்ல, இடைத்தேர்தல் நடைபெறுகிற விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளின் வாக்காளர்களில் பெரும்பான்மையோர் அந்த நம்பிக்கையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள். அவர்கள் இதனை வெறும் இடைத்தேர்தலாகப் பார்க்கவில்லை. தங்களை அலட்சியப்படுத்துகிற - அவமதிக்கிற - அலைக்கழிக்கிற ஆட்சியாளர்களைத் தண்டிப்பதற்கான தக்கதொரு வாய்ப்பாக வாக்களிக்கும் நாளினை எதிர்பார்க்கிறார்கள்.

மக்களிடம் தெளிவாக வெளிப்படுகிற அந்த உணர்வினை கழகத்தின் செயல்வீரர்களாம்- நம் ஆருயிர்த் தலைவரான கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளாகிய நீங்கள், களத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று உங்களில் ஒருவனான நான் நினைவூட்டிடக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இடைத்தேர்தல் களத்தில் ஆளுங்கட்சியின் அமைச்சரவைப் பட்டாளம் இரு அணிகளாகப் பிரிந்து, முழு அதிகார பலத்துடனும் முழுவீச்சிலான அதிகார துஷ்பிரயோகத்துடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகளையும் - தங்களுக்கான ஏவல் ஆட்களாக ஆட்சியாளர்கள் மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் பல நேரங்களில் ஒருதலைப்பட்சமான நிலையில் இருந்தாலும், ஜனநாயகத்தைக் காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கில், இன்னமும் அந்த அமைப்பின் மீது நாம் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.

தேர்தல் களத்தில் வேறு எவர் மீது வைக்கின்ற நம்பிக்கையைவிடவும், வாக்காளர்களாகிய பொதுமக்கள் மீதே அதிக நம்பிக்கை வைத்திட வேண்டும். களநிலவரப்படி, வாக்காளர்கள் நம் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி தொகுதி கழக வேட்பாளர் புகழேந்திக்கும், நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும் ஆதரவு தெரிவிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் கழகத்தினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமையவேண்டும்.

உயிரோடும் உணர்வோடும் உதிரத்தோடும் கலந்திருக்கும் இருவண்ணக்கொடி தாங்கிய உடன்பிறப்புகளுக்கு- ஸ்டாலின் மடல்!

அதுபோலவே, புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரின் வெற்றிக்கும் பாடுபட வேண்டும்.

வீடு வீடாகச் செல்லுங்கள்; ஒவ்வொரு வாக்காளராகச் சந்தியுங்கள்; நமது அணிக்கு அவர்களின் வாக்குகளை உறுதி செய்யுங்கள். ஒரு ‘கை’யில் ஒன்றிணைந்திருக்கும் விரல்களை விரித்தால், எப்படி ‘உதயசூரியன்’ போல அமைகிறதோ, அதுபோல கழகத்தின் அனைத்து நிலையிலுள்ளவர்களும் ஒருங்கிணைந்து, விரிவான அளவில் தேர்தல் களத்தில் வேகமாகப் பணியாற்றுங்கள்.

தோழமைக் கட்சியின் நிர்வாகிகள் அனைவருக்கும் உரிய மதிப்பளித்து, உடன் அழைத்துச் செல்லுங்கள்.

அரசியல் தோழமை என்பது எப்படி அமையவேண்டும் என்பதை, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாடு முழுமைக்கும் உணர்த்தியது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த மகத்தான வெற்றிக் கூட்டணி. அந்தத் தோழமை உணர்வு இடைத்தேர்தல் களத்திலும் தொடர்ந்து நீடித்து, வெற்றியினைப் பெற்றிடவேண்டும்.

மக்கள் நமக்குத் தரத்தயாராக இருக்கின்ற வெற்றியைத் தட்டிப் பறித்திட ஆட்சியாளர்கள் சாம-பேத-தான-தண்டம் என தந்திர வழிகள் அனைத்தையும் கையாள்வார்கள்; அதிகார அடாவடி அத்துமீறல்களில் ஈடுபடுவார்கள். கொள்ளையடித்துக் குவித்து வைத்திருக்கும் பணத்தால் வெற்றியை விலைபேசி வாங்கிடலாம் என நினைப்பார்கள்.

அவர்களின் அத்தனை முறைகேடுகளையும் தில்லுமுல்லுகளையும் எதிர்கொள்ள நம்மிடம் இருக்கும் ஆயுதம் உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு. அந்த உழைப்பினை ஒரு சிறிதும் சிதறவிடாமல் தேர்தல் களத்தில் காட்டுங்கள்.

நாங்குநேரி - விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட அயராது களப்பணியாற்றுங்கள்.

வெற்றி நமக்குக் காத்திருக்கிறது. அக்டோபர் 21 அன்று, வாக்காளர்களின் திருக்கரங்களிலிருந்து அதனைப் பெறுவதற்கு உழையுங்கள்.

அக்டோபர் 24ல் வெற்றிச் செய்தியினைத் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் காணிக்கையாக்கப் பாடுபடுங்கள்!”

இவ்வாறு தனது மடலில் குறிப்பிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

banner

Related Stories

Related Stories