மு.க.ஸ்டாலின்

வன்னிய இன மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர் - மு.க ஸ்டாலின் பரப்புரை

தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வன்னிய இன மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர் - மு.க ஸ்டாலின் பரப்புரை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தலையொட்டி தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து காணை பகுதியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், தற்போதைய ஆட்சி அடிமையாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு கொள்ளைக் கூடாரமாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்று வருகிறது. குப்பையில் கூட ஊழல் செய்யும் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து வருகிறது.

வன்னிய இன மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர் - மு.க ஸ்டாலின் பரப்புரை

தி.மு.க கடந்த 8 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.‌ தி.மு.க பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இயக்க மக்களுக்காக பாடுபடும் என அண்ணா தெரிவித்தார்.‌ விக்கிரவாண்டி தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதி. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தது தலைவர் கலைஞர் ஆட்சியில்தான்.

1987 இட ஒதுக்கீடு பிரச்சனை சம்பந்தமாக பல கட்ட போராட்டங்களில் இந்த தொகுதியில் நடைபெற்றது. அப்போது 25 பேர் இறந்துபோனார்கள். அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க இதைப் பற்றி சிந்திக்கவில்லை. பின்னர் தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் இறந்தவர்கள் ஒவ்வொருவருக்கும் மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது.

வன்னிய இன மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர் - மு.க ஸ்டாலின் பரப்புரை

இட ஒதுக்கீட்டுக்காகப் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர் வாபஸ் பெறப்பட்டது. வன்னியர் சமுதாயத்திற்காகப் பாடுபட்ட எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சியார் சிலையை வைக்க வேண்டும் என பல்வேறு தலைவர்கள் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்களிடம் கோரிக்கை வைத்தார்கள்.‌‌

சென்னை மாநகரின் முக்கிய சாலையான அண்ணா சாலையின் கிண்டி அருகே அவரின் சிலையை தலைவர் கலைஞர் திறந்து வைத்தார்கள். வன்னியர் சமூகத்தைச் சார்ந்த பல்வேறு தலைவர்கள் தி.மு.க ஆட்சி காலத்தில் அதேபோல் மத்திய அரசில் கூட்டணியில் அங்கம் வகித்தபோதும் முக்கிய பொறுப்புகளிலும் அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர்.‌

வன்னிய இன மக்களுக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தவர் கலைஞர் - மு.க ஸ்டாலின் பரப்புரை

வன்னியர் சமுதாயத்திற்காகப் பல்வேறு திட்டங்களை படைத்தவர் தான் தி.மு.க தலைவர் கலைஞர். அந்த சமுதாயத்தை பயன்படுத்தி இந்த சமுதாயத்தின் உழைப்பைப் பயன்படுத்தி கொள்ளை அடித்துக் கொண்டிருக்க கூடியவர்கள் இப்போது நம்மை குறை கூறுகிறார்கள்.

தி.மு.க ஆட்சி வந்தவுடன் ஏ.கோவிந்தசாமி அவர்கள் மணிமண்டபம் அமைத்து தருவோம் என உறுதிமொழி அளித்து உள்ளேன். தி.மு.க சொன்னதைத் தான் செய்யும் செய்வதை தான் சொல்லும். கரும்பு விவசாயம் செய்தவர்கள் கடன்களை திரும்ப தர முடியாத ஒரு சூழலில் உள்ளார்கள்.‌ அதற்கு காரணம் கரும்பு நிலுவைத் தொகையை வழங்காததால் தான்.

இன்றைக்கு நாட்டில் உள்ள முக்கியப் பணக்காரர்களை வங்கி கடன்களை பாரத ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. ஆனால் விவசாயக் கடன் தள்ளுபடி செய்ய மறுத்து அவர்களை கைது செய்கிறது. இந்த நிலையை மாற்ற திமுக வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்'' என்று வாக்கு சேகரித்தார். வழி நெடுகிலும் மக்கள் தலைவர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.

banner

Related Stories

Related Stories