மு.க.ஸ்டாலின்

தலைவர் கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

நீட் தேர்வை அடியோடு ஒழிக்க வேண்டும் என திருவாரூரில் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

தலைவர் கலைஞருக்கு திருவாரூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவாரூரில் தலைவர் கலைஞருக்கு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருவாரூரில் செய்தியாளார்களை சந்தித்த போது அவர் பேசியதாவது, " தலைவர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் வகையில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக திட்டமிட்டுள்ளோம். கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தின் போது இந்த அருங்காட்சியகத்தை திறக்க முடிவெடுத்துள்ளோம்” என மு.க.ஸ்டாலின் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”நீட் தேர்வு முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே தி.மு.கவின் நிலைபாடு. மேலும் இந்த நீட் தேர்வில் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணையின் மூலம் நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகையால், இதனை சிபிஐ விசாரணைக்கு மாற்றினால் மட்டுமே உண்மை வெளிவரும்.” என்றார்.

மேலும், திருவாரூரில் தேவையான மருத்துவ பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும், திருவாரூரில் உள்ள மருத்துவ கருவிகளை புதுக்கோட்டைக்கு மாற்றும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

banner

Related Stories

Related Stories