மு.க.ஸ்டாலின்

“காந்தியின் சிந்தனைகளை முன்னெப்போதையும்விட நினைவுகூற வேண்டிய தருணம் இது” : மு.க.ஸ்டாலின் ட்வீட்!

காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி வாழ்த்து தெரிவித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

“காந்தியின் சிந்தனைகளை முன்னெப்போதையும்விட நினைவுகூற வேண்டிய தருணம் இது” : மு.க.ஸ்டாலின் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாட்டின் சுதந்திரத்துக்காக போராடிய அண்ணல் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

மகாத்மாவின் பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோல், தமிழகத்திலும் சென்னையில் உள்ள காந்தியின் சிலைக்கு மலர் தூவி ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பலர் மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

அதில் “அஹிம்சை, இரக்கம், அஞ்சாமை போன்ற பண்புநலன்களையும், துன்பங்களை எதிர்கொள்ளும்போது தைரியமாக இருக்கவேண்டும் என்றும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசத் தந்தையையும், அவரது சிந்தனைகளையும் நினைவுகூற வேண்டிய தருணம் இது. வாய்மையே வெல்லும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories