மு.க.ஸ்டாலின்

சென்னை பெட்டிக்கடைகளில் ஜோராக விற்பனையாகும் குட்கா... காவல்துறை இருக்கிறதா? : மு.க.ஸ்டாலின் கேள்வி!

தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மறைமுகமாக விற்கப்படுபவதைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

சென்னை பெட்டிக்கடைகளில் ஜோராக விற்பனையாகும் குட்கா... காவல்துறை இருக்கிறதா? : மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருட்களை தயாரிக்கவும், விற்கவும் தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு தடை விதித்திருந்தது. தடையை மீறியும் குட்கா பொருட்களை விற்பனை செய்ய அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி அளித்தது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த குட்கா வழக்கில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், டிஜிபி டிகே ராஜேந்திரனும் சம்மந்தப்பட்டிருந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இருப்பினும் முறைகேடாக குட்கா விற்பனை செய்ய அனுமதித்த வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டிகே கஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெட்டிக்கடைகளில் ஜோராக விற்பனையாகும் குட்கா... காவல்துறை இருக்கிறதா? : மு.க.ஸ்டாலின் கேள்வி!

இந்த நிலையில், சென்னையில் ஆங்காங்கே திருட்டுத்தனமாக குட்கா பொருட்கள் விற்கப்படுவது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சி கள ஆய்வு நடத்தியுள்ளது. அதில், தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள சாலையோர பெட்டிக்கடைகளில் குட்கா விற்பனை எவ்வித சலனமும் இல்லாமல் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை எவர் வேண்டுமானாலும் வாங்கலாம் என்ற அளவுக்கு குட்கா விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த முறைகேட்டு சம்பவங்களை தடுக்கவும், குட்கா விற்பனை செய்பவர்களை கைது செய்யவும் சிபிஐ முனைப்பு காட்டாததே ஜோரான விற்பனைக்கு காரணம் என தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை பெட்டிக்கடைகளில் ஜோராக விற்பனையாகும் குட்கா... காவல்துறை இருக்கிறதா? : மு.க.ஸ்டாலின் கேள்வி!

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், “அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் வரை லஞ்சம் பெற்ற குட்கா முறைகேட்டு வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையிலும், தமிழகத்தில் குட்கா விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.

காவல்துறை இருக்கிறதா அல்லது இப்போது உள்ள டிஜிபியும் இந்த முறைகேடுகளுக்கு துணை போகிறாரா எனக் கேள்வி எழுப்பிய அவர், சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடுத்து நிறுத்துங்கள்” எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories