மு.க.ஸ்டாலின்

‘தமிழர்களை சீண்டும் சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ - மு.க.ஸ்டாலின்

ரயில்வே நிலைய அதிகாரிகள் தமிழில் பேசக் கூடாது என்ற உத்தரவுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிகை விடுத்துள்ளார்.

‘தமிழர்களை சீண்டும் சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருக்க கூடாது என தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது. தென்னக ரயில்வேயின் இந்த உத்தரவிற்கு, அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இதைக்க கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

"தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில்வே கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் மற்றும் நிலைய அலுவலர்கள் பேசும் போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், தமிழில் பேசக் கூடாது. என்று தமிழகத்திலேயே தமிழில் பேசத் தடை விதித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஆணவமாகவும் அடாவடித்தனமாகவும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழ்பேசக்கூடாது, இந்தி பேசு என்பது மொழித்திணிப்பு மட்டுமல்ல மொழி மேலாதிக்கம், மொழி அழிப்பு. மேலும் மேலும் தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாடி வருகிறார்கள், சீண்டிப் பார்க்கிறார்கள். இது போன்ற சில்லரைத்தனமான உத்தரவுகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் நாங்கள் முற்றுப்புள்ளி வைப்போம் என எச்சரிக்கிறேன் " இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories