மு.க.ஸ்டாலின்

கிரண்பேடி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது -மு.க.ஸ்டாலின் ட்வீட்

அரசின் அதிகாரத்தில் தலையிட கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்திருப்பது வரவேற்கத்தக்கது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது -மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் ஆவணங்களை கேட்க அதிகாரம் உள்ளது என மத்திய அரசு 2017-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கு கிளை 'புதுச்சேரி ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு மக்களால் தேர்ந்தெடுத்த மாநில அரசின் உரிமையை பறிப்பதாகும் என்றும் கருத்து தெரிவித்து கடந்த 30-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், உள்துறை அமைச்சகத்தின் கோரிக்கையை நிராகரித்தும், கிரண்பேடிக்கு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லை என்றும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ட்விட்டரில் கருத்து கூறியுள்ளார்.அதில் "புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் 'தடை விதிக்க மறுத்து இருப்பது வரவேற்கத்தக்கது'.

அரசியல் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநரை உடனே திரும்பப்பெற வேண்டும்!" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories