கல்வி & வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 600 காலியிடங்கள் - B.E/B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் Assistant Engineer வேலைக்கு 600 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 600 காலியிடங்கள் - B.E/B.Tech பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
கவிமணி
Updated on

Electrical பிரிவில் Assistant Engineer வேலைக்கு 400 காலியிடங்கள் உள்ளன. அதில், Electrical and Electronics Engineering படித்தவர்களுக்கு 364 இடங்களும், Electronics and Communication Engineering அல்லது Instrumentation Engineering படித்தவர்களுக்கு 28 இடங்களும், Computer Science அல்லது Information Technology Engineering படித்தவர்களுக்கு 8 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Instrumentation Engineering, Computer Science, Information Technology Engineering பாடப்பிரிவுகளில் பி.இ., அல்லது பி.டெக் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு ரூ.39,800 முதல் ரூ.1,26,500 வரை ஊதியவிகிதம் வழங்கப்படும். 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 35 வயதுகுள்ளும் இருக்க வேண்டும்.

Mechanical பிரிவில் Assistant Engineer வேலைக்கு 125 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Mechanical Engineering, Production Engineering, Industrial Engineering, Manufacturing Engineering ஆகிய பாடப்பிரிவுகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.39,800 முதல் ரூ.1,26,500 வரை ஊதியவிகிதம் வழங்கப்படும். 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 35 வயதுகுள்ளும் இருக்கவேண்டும்.

Civil பிரிவில் Assistant Engineer வேலைக்கு 75 காலியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, Civil Engineering பாடப்பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு ரூ.39,800 முதல் ரூ.1,26,500 வரை ஊதியவிகிதம் வழங்கப்படும். 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்கிற பொதுப் பிரிவினர் விண்ணப்பிக்கலாம். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 32 வயதுக்குள்ளும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 35 வயதுகுள்ளும் இருக்க வேண்டும்.

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

www.tangedco.gov.in. எனும் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : மார்ச் 16.

banner

Related Stories

Related Stories