ஜல்லிக்கட்டு

சீறிப்பாயும் காளைகள் - வீரத்தோடு அடக்கும் காளையர்கள் : விறுவிறுப்பாக தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கி நடைபெறுகிறது.

சீறிப்பாயும் காளைகள் - வீரத்தோடு அடக்கும் காளையர்கள் : விறுவிறுப்பாக தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்றைய தினம் முடிந்த நிலையில், இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக தொடங்கியது. ஜல்லிக்கட்டு காளைகள், காளைகளை அடக்கும் கட்டிளம் காளைகள் களமாடும் வேகத்தில் அடங்கிவிடும் இளையோர் என களை கட்டுகிறது.

ஜல்லிக்கட்டில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுபிடி வீரர்களுக்கும் தங்கக் காசுகள், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதுகாப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

குறிப்பாக, 1,000 காளைகள் மேற்பட்ட காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்து பங்கேற்கின்றனர். மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. மாடுபிடி வீரர்களின் ஆன்லைனில் பதிவு செய்த சான்றிதழ்களை சரி பார்த்த பின்பு ப்ரீத்தி அனலைசர் என்னும் கருவி மூலம் அவர்கள் மது அருந்தியுள்ளனரா? என பரிசோதனை செய்து தொடர்ந்து அவர்களின் உடல் வெப்பநிலை, ரத்த அழுத்தம், உடல் எடை உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து மருத்துவர் தகுதி சான்றிதழ் வழங்கி வருகின்றனர். அதன் பின்பு தான் வீரர்கள் களம் இறங்க உள்ளனர்.

சீறிப்பாயும் காளைகள் - வீரத்தோடு அடக்கும் காளையர்கள் : விறுவிறுப்பாக தொடங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு!

40 மருத்துவர் குழு உட்பட 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், பணியாளர்கள் குழுக்களாக மருத்துவ பரிசோதனை செய்து வருகின்றனர். ஒரு சுற்றுக்கு 50பேர் வீரர்கள் வீதம் களம் கான உள்ள நிலையில் அவர்களுக்கு மஞ்சள், ஊதா, சிகப்பு என வண்ணங்களில் டீ சர்ட்டுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

வீரர்கள் மருத்துவ பரிசோதனை யில் பதிவு சான்றிதழ் மாற்றி எடுத்து வருதல், குறைந்த இரத்தம் அழுத்தம், மது அருந்தி வருதல் உள்ளிட்ட காரணங்களால் இதுவரை 10 வீரர்கள் தகுதி நீக்கம்‌ செய்யப்பட்டுள்ளனர்.

வெற்றி பெருபவர்களுக்கும், காளை உரிமையாளர்களும், முதல் பரிசு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

மேலும் அதேபகுதியில், சென்ற ஆண்டு பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிக காளை பிடித்துவந்த அரவிந்த்ராஜ் என்பவர் காளையை அடக்க முயன்ற போது மாடுமுட்டி உயிரிழந்தார். இன்று அவரது குடும்பத்தார் அவரது இல்லத்தில் வைத்து அரவிந்ராஜுக்கு முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தினர்.

பாலமேடு ஜல்லிக்கட்டு முதல் சுற்று முடிவு

காளைகள் : 106

வீரர்கள் :50

தமிழரசன், சின்னப்பட்டி ( 18) - 3

ராஜா, பாலமேடு (43) - 3

அஜித், பாலமேடு (30) - 3

தனசிங்கம், தேவசேரி (5) - 2

சக்திமணி, ராஜக்கால்பட்டி ( 19) - 2

banner

Related Stories

Related Stories