இந்தியா

”பீகாரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவோம்” : 10 வாக்குறுதிகளை கொடுத்த இந்தியா கூட்டணி!

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவோம் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

”பீகாரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகளை பெற்றுத்தருவோம்” : 10 வாக்குறுதிகளை கொடுத்த இந்தியா கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க பல பொய் நாடகங்களை அரங்கேற்றினாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு உரிய உரிமைகளை பெற்று தருவோம் என மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராகுல்காந்தி வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக பத்து வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பதிவிட்டுள்ளார். கல்வி என்பது மிகவும் முக்கியமானது என்றும், அதனை எட்ட, இத்தகைய சமூகத்தினரின் பங்கை அதிகரிக்க செய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக பல பொய் நாடகங்களை அரங்கேற்றினாலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கு உரிய உரிமைகளை பெற்று தருவோம் என ராகுல்காந்தி உறுதிபட தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளி மற்றும் பல்கலைக்கழங்களில் கல்வி பயில இட ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படும் என்றும், குறிப்பாக தனியார் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் பதிவிட்டுள்ளார்.

தனியார் பள்ளிகளில் "விதிகளுக்கு பொருந்தவில்லை" என்ற நடைமுறை முற்றிலும் முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும், இது கல்விக்கான மோதல் மட்டும் அல்ல, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சமத்துவம் மற்றும் கண்ணியத்தை பெற்று தருவதற்கான மோதல் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தான், சமூக நீதி மற்றும் சமத்துவ வளர்ச்சிக்கான உத்தரவாதம் என்றும் மக்களவை எதிர்க்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories