இந்தியா

ஊட்டச்சத்து குறைபாடு: 15 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் உயிர்பலி!

மத்திய பிரதேசத்தில் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 15 மாத குழந்தை உயிரிழந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு: 15 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் உயிர்பலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கடந்த 2024-ம் ஆண்டு வெளியான தரவறிக்கையின்படி 127 நாடுகளைக் கொண்ட உலகளாவிய பட்டினி குறியீடு பட்டியலில் பா.ஜ.க.வின் பாரத தேசம், 105 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. உலக பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கையை விட மிகவும் மோசமான இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இது இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்கள் மாநில மக்களுக்கு தேவையான பலவற்றையும் செய்து கொடுக்கும் சூழலில், குழந்தைகள் நலனில் இந்தியாவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. காமராஜர் காலத்தில் பள்ளிக்கு வந்தால் ஒருவேளை உணவு என்றும், பின்னர் சத்துணவு சாப்பாட்டுக்கு முட்டை என்றும், தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமின்றி, காலை உணவு என குழந்தைகளின் ஊட்டச்சத்திலும் தமிழ்நாடு அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி தமிழ்நாட்டை ஊட்டச்சத்துக் குறைபாடில்லாத மாநிலமாக்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரும் நிலையில், 'ஊட்டச்சத்தை உறுதி செய்' என்ற மகத்தான திட்டம் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊட்டச்சத்து குறைபாடு: 15 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் உயிர்பலி!

பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும். எனவே இந்த மகத்தான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. அதன்விளைவாக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் மரணம் அதிகரித்து வருகிறது. தற்போது கூட ஒரு சிறு குழந்தை இறந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தின் சிவபுரி என்ற பகுதியில் திவ்யான்ஷி என்ற 15 மாத பெண் குழந்தையின் உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே தீவிர சிகிச்சை பெற்று வந்த குழந்தை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஊட்டச்சத்து குறைபாடு: 15 மாத குழந்தைக்கு நேர்ந்த சோகம்.. பாஜக ஆளும் மாநிலங்களில் தொடரும் உயிர்பலி!

பொதுவாகவே 15 மாத குழந்தை 9 கிலோ வரை எடை இருக்க வேண்டும் சூழலில், இந்த குழந்தை வெறும் 3.7 கிலோ மட்டுமே எடை கொண்டிருந்துள்ளார். மேலும் 10 g/dL வரை ஹீமோகுளோபின் (Hemoglobin) இருக்க வேண்டும். ஆனால் இந்த குழந்தைக்கு 7.4 g/dL அளவே இருந்துள்ளது. இந்த அளவு மிகவும் ஆபத்தானதாகும்.

குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை இருப்பதை அறிந்த மருத்துவர், ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு அழைத்து செல்ல அறிவுறுத்தியுள்ளார். எனவே குழந்தையின் தாயும் அழைத்து செல்ல முற்பட்டபோது, குழந்தையின் தாத்தா, பாட்டி தடுத்துள்ளனர். மேலும் "பெண் குழந்தைதானே.. செத்தால் சாகட்டும்.." என்று தனது மாமனார், மாமியார் கூறியதாக குழந்தையின் தாய் வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஷியோப்பூர், பிந்த் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளது. இப்படியாக குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், அம்மாநில பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories