இந்தியாவில் அணுசக்தி துறையை அரசுத் துறைகள் மட்டுமே கையாண்டு வருகின்றன. தேசிய அணுமின் கழகம், தேசிய அனல்மின் கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே அணுசக்தியை கையாண்டு வருகின்றன.
இந்தத் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஒன்றிய அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அணுசக்தி தொடர்புடைய உபகரணங்களை உற்பத்தி செய்யவும், வடிவமைப்பு பணிகளை தொடங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதன்படி அந்த நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்களை அணு சக்தி துறையில் அனுமதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு தயாராகி வருகிறது.
அதன்படி 1962 ஆம் ஆண்டு அணுசக்தி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.