இந்தியா

பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்துவிட்டேன் : உதவிய 2 இஸ்லாமிய சகோதரர்கள் - ஆர்த்தி நெகிழ்ச்சி!

பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்தேன், ஆனால் காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது என கேரளாவின் ஆர்த்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பஹல்காம் தாக்குதலில் தந்தையை இழந்துவிட்டேன் : உதவிய 2 இஸ்லாமிய சகோதரர்கள் - ஆர்த்தி நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தாக்குதலுக்கு தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பு லஷ்கர் இ தொய்பா அமைப்பின் உட்பிரிவு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த கொடூர சம்பவத்தில் தனது தந்தையை இழந்த கேரள மாநிலத்தை சேர்ந்த ஆர்த்தி ஆர்.மேனன், காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது என நடந்த சம்பவத்தை விவரித்துள்ளார்.

கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்த்தி ஆர்.மேனன் “நாங்கள் பிற்பகல் 2.10 மணியளவில் அங்கு சென்றோம். பஹல்காமை அடைந்த 10 நிமிடங்களுக்குள் இந்தத் தாக்குதல் நடந்தது. தூரத்தி லிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. அதே நேரத்தில், தூரத்தில் யாரோ மேல்நோக்கிச் சுடு வதைக் கண்டேன். என் அப்பா, குழந்தைகள் மற்றும் நான் காட்டுக் குள் ஓடினோம். நாங்கள் ஒரு புல்வெளியை அடைந்தபோது, துப்பாக்கியுடன் ஒரு மனிதன் எங்களைத் தடுத்தான். அங்கே தப்பிக்க முயன்ற பலர் இருந்தனர்.

அனைவரையும் தரையில் படுக்கச் சொன்னார். அவர் ஒவ்வொரு வரையும் அணுகி, “கலிமா” (மத வசனம்) அல்லது வேறு ஏதோ ஒன்றைச் சொல்லி இரண்டு முறை கேட்டார். தெரியாது என்று சொன்னவர்கள் என் தந்தை உட்பட சுட்டுக் கொல்லப்பட்டனர். நான் என் தந்தையைக் கட்டிப் பிடித்து அழுதபோது அவர்கள் என் தலையில் துப்பாக்கியைக் காட்டி னர். எனது மகன்கள் கதறி அழு வதை கண்டதும் அந்த நபர் காட்டுக்குள் ஓடினார்.

படுகொலை யால் முழுப்பகுதியும் பீதியில் இருந்த போது, காஷ்மீரைச் சேர்ந்த 2 இளம் முஸ்லிம் டாக்சி ஓட்டுநர்கள் (முசாபிர், சமீர்) உத விக்காக எங்களிடம் ஓடி வந்த னர். நான் அதிகாலை 3 மணி வரை பிணவறைக்கு முன்னால் காத்தி ருந்து பின்னர் காலை 6 மணிக்கு மீண்டும் திரும்ப வேண்டி யிருந்தது. இந்த நேரத்தில், முசாபிர், சமீர் ஆகிய இருவரும் தங்கள் சொந்த சகோதரியைப் போல அர வணைத்து என்னுடன் இருந்தனர்.

பஹல்காமில் தந்தையை இழந்துவிட்டேன் ; ஆனாலும் காஷ்மீர் எனக்கு இரண்டு சகோ தரர்கள் கொடுத்துள்ளதாக விமான நிலையத்தில் முசாபிர் மற்றும் சமீரிடம் சொன்னேன். அதே போல “அல்லாஹ் அவர்களைக் காப்பாற்றுவார்” என்றும் நான் அவர்களிடம் சொன்னேன்”. மேலும் உள்ளூர்வாசிகள் அனை வரும் எங்களுக்கு உதவினார்கள். அவர்கள் எங்களுக்கு இலவசமாக தங்க இடம் கொடுத்தார்கள்” என கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories