இந்தியா

”ஒன்றிய அரசுக்கு மதம் பிடித்து விட்டது” : வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஆ.ராசா MP பேச்சு!

வக்ஃப் சொத்துக்களை பாஜக அபகரிக்க முயற்சிக்கிறது என மக்களவையில் ஆ.ராசா எம்.பி குற்றம்சாட்டியுள்ளார்.

”ஒன்றிய அரசுக்கு மதம் பிடித்து விட்டது” : வக்ஃப் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசிய ஆ.ராசா MP பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டங்களையே அமல்படுத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ’இந்து ராஷ்டிரம்’ என்ற கனவை நிறைவேற்றவே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு செயல்படுகிறது.

இதனை உறுதி செய்யும் வகையில் தற்போது மீண்டும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளை மீறி வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை இன்று மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க அரசு தாக்கல் செய்துள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த மசோதா மீது மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த விவாதத்தில் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர்.

இதில் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா “வக்ஃப் வாரிய மசோதா விவகாரத்தில் உள்ள முழுமையான உண்மைகளை மறைத்து ஒன்றிய அமைச்சர் திருத்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறேன்.

1970 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984 வக்ஃப் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1995 ஆம் ஆண்டு இஸ்லாம் மதத்தினர் கோரிக்கை படி இரண்டு திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்பிறகு 2013 ஆம் ஆண்டும் சில திருத்தம் கொண்டுவரப்பட்டது. தற்போது எந்த பரிந்துரை அடிப்படையில் இந்த புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது?.

தமிழ்நாட்டில் இந்து அறநிலைய துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாக சேர்க்கும் திருத்தத்தை கொண்டு வந்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது.

ஒட்டுமொத்த வக்ஃப் சொத்துக்களையும் ஒன்றிய பாஜக அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. வக்ஃப் சொத்துக்கள் என அறிவிக்கப்பட்டதை அவை வக்ஃப் சொத்துக்கள் தானா என்று வரையறுக்கும் சட்டப்பிரிவு அபத்தமானது. இந்த சட்டப்பிரிவின் அதிகாரம் முழுவதும் அரசிடம் இருப்பது மிகவும் ஆபத்தானது.

banner

Related Stories

Related Stories