இந்தியா

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்படும் 337 டன் நச்சுக்கழிவு!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நச்சுவாயுக் கசிவு விவகாரத்தின் வடு, 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்ற நடவடிக்கைகள் தொடக்கம்.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்படும் 337 டன் நச்சுக்கழிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் 1984ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய நச்சுவாயுக் கசிவு விவகாரத்தின் வடு, 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்ற நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது.

போபால் நகரில் ஏற்பட்ட நச்சுவாயுக் கசிவு நேர்ச்சியில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், 337 டன் நச்சுக்கழிவுகள் அங்கேயே படிந்தன.

அதனை, கடந்த 40 ஆண்டுகளில் அதிக காலம் ஆட்சி செய்த பா.ஜ.க கண்டுகொள்ளாமல் மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் இருந்து வந்தது. இந்நிலையில், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, அக்கழிவை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது ஒன்றிய அரசு.

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்படும் 337 டன் நச்சுக்கழிவு!

அவ்வகையில், போபாலில் இருந்து இக்கழிவுகளை சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிதாம்பூருக்கு எடுத்து செல்ல 12 கண்டெய்னர் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, கழிவுகள் இடம் மாற்றப்பட்டு வருகின்றன.

மத்தியப் பிரதேசத்தின் ஒரே எரிப்பு களம் பிதாம்பூரில் தான் இருக்கிறது என்பதால், 250 கிலோ மீட்டர் கழிவுகளை எடுத்துச் செல்வது என்பது பெரும் சிரமத்திற்குரியதாகவே அமைந்துள்ளது.

இக்கழிவுகளை முழுமையாக அகற்ற 50க்கும் மேற்பட்ட நாட்கள் தேவைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories