
ரத்தன் டாடா மறைவை அடுத்து டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். ரத்தன் டாடா தலைவராக இருந்தது போது தனக்கு அடுத்து யார் என்று சொல்லவில்லை.
இதனால் டாடா அறக்கட்டளையின் 13 அறங்காவலர்கள் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் டாடா அறக்கட்டளையின் அடுத்த தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
யார் இந்த நோயல் டாடா?
நோயல் டாடா இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார். 1998 ஆம் ஆண்டு டிரண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பு இவருக்கு கிடைக்கிறது. தனக்கு கிடைத்த இந்த முதல் பொறுப்பை பயன்படுத்திக் கொண்டு, இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட டிரண்ட் நிறுவனத்தின் சில்லறை விற்பனை கிளைகளை உருவாக்கினார்.
பின்னர், டாடா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநராக இருந்த போது 2010 -2021 நிறுவனத்தின் வருவாயை 500 மில்லியனில் இருந்து 3 பில்லியனாக பங்கை உயர்த்தியதில் இவருக்கு முக்கிய பங்கு உள்ளது.
மேலும், டைட்டன் நிறுவனம் மற்றும் டாடா ஸ்டீல் ஆகிய இரண்டிலும் துணைத் தலைவராக பணியாற்றியுள்ளார். இப்படி டாடா குழுமத்தின் பல நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.
இந்த நிலையில்தான்,டாடா அறக்கட்டளையின் தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இந்த தலைவர் பதவிக்கு டாடா குடும்பத்தை சேர்ந்தவர்களே இருந்து வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






