இந்தியா

ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சி கோரம் : பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்!

ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சி கோரம் : பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்து மத சத்சங்கம் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று கடந்த ஜூலை 2-ம் தேதி நடைபெற்றது. போலே பாபா என்ற சாமியார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மானவ் மங்கள் மிலான் சத்பவன சமாகன் குழு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதி மட்டுமின்றி பிற பகுதிகளை சேர்ந்த மக்களும் வருகை தந்திருந்தனர். இந்த சூழலில் மக்கள் அனைவரும் போலே பாபாவை காண மிகுந்த ஆர்வத்துடன் வந்திருந்தனர். அந்த சமயத்தில் போலே பாபா அங்கிருந்து சென்றபோது, அவரது காலடி மண்ணை எடுக்க அங்கிருந்த மக்கள் முண்டியடித்தனர். அந்த நேரத்தில் கூட்டம் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி பலரும் பாதிக்கப்பட்டனர்.

ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சி கோரம் : பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்!

இந்த கூட்ட நெரிசலில் 121 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலரும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில பாஜக அரசும், ஒன்றிய பாஜக அரசும் இதற்கு நிவாரணம் கொடுத்தாலும், இந்த சம்பவம் அரசின் அலட்சியத்தால் நேர்ந்த கொடூரம் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு போக சரியான வானங்கள் (ஆம்புலன்ஸ்) இல்லாமல் உடனிருந்தவர்கள் மிகவும் திணறியிருந்தனர். தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உதவியோடு, அந்த உடல்கள் கொண்டு செல்லப்பட்டது. நீண்ட மணி நேரம் சம்பவ இடத்துக்கு மேலதிகாரிகளுக்கு வரவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

ஹத்ராஸ் ஆன்மீக நிகழ்ச்சி கோரம் : பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்!

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, இந்த நிகழ்ச்சிக்காக 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதும், ஆனால் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதாக அங்கு சென்றவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முக்கிய காரணியாக விளங்கும் சாமியார் போலே பாபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர். அதோடு போலே பாபா தற்போது தலைமைறைவாகவும் உள்ளார். இந்த நிகழ்வு குறித்து அவர் எந்த ஒரு வீடியோவும் விளக்கமும் வெளியிடவில்லை.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தர பிரதேசத்துக்கு சென்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், எம்.பி-யுமான ராகுல் காந்தி பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்து, நீதி கிடைப்பதற்கு உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார்.

banner

Related Stories

Related Stories