இந்தியா

மணிப்பூர் - ”வாய்ச்சவடாலை தவிர வேறு எதுவும் மோடிக்கு தெரியாது” : ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!

மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மணிப்பூர் - ”வாய்ச்சவடாலை தவிர வேறு எதுவும் மோடிக்கு தெரியாது” : ஜெய்ராம் ரமேஷ் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிப்பூரில் ஒரு வருடத்திற்கு மேலாக வன்முறை நிகழ்ந்து வருகிறது. இந்த வன்முறையில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை இழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இப்படி கடந்த ஒரு வருடமாக தங்களது சொந்த ஊரிலேயே மணிப்பூர் மக்கள் அகதிகளைபோல் வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஒரு வருடத்தில் ஒரு முறைகூட மணிப்பூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர் மோடி சந்திக்கவில்லை.ஆனால் நேற்று நடந்த மாநிலங்களவையில் பேசும் போது மோடி,”மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்ய வேண்டாம்” என்றும் கூறியுள்ளார்.

இதையடுத்து பிரதமர் மோடியின் இந்த கருத்திற்கு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கண்டித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,”ஆகஸ்ட் 1, 2023 அன்று மணிப்பூரில் அரசியல் சாசன இயந்திரம் செயலிழந்திருப்பதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. நேற்று “அரசை நம்ப முடியாது” என உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனாலும் இந்த Non Biological பிரதமர் வாய்ச்சவடாலை தவிர வேறு எதுவும் செய்வதாக இல்லை” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories