இந்தியா

OBC, பட்டியலின மக்களுக்கு அநீதி: உத்தர பிரதேச பா.ஜ.க அரசை விமர்சித்த ஒன்றிய அமைச்சர்!

உத்தர பிரதேச பா.ஜ.க அரசை ஒன்றிய அமைச்சர் அனுபிரியா பட்டேல் விமர்சித்துள்ளார்.

OBC, பட்டியலின மக்களுக்கு அநீதி: உத்தர பிரதேச பா.ஜ.க அரசை விமர்சித்த ஒன்றிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உத்தரப்பிரதேசத்தில், ஓபிசி மற்றும் பட்டியலின மக்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் பாகுபாடு காட்டப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத்துக்கு ஒன்றிய அமைச்சர் அனுபிரியா பட்டேல் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளிகள் மற்றும் நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகள் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்யும் வகையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

ஓபிசி மற்றும் பட்டியலின சமூகங்களைச் சேர்ந்த பலர் தன்னை தொடர்புகொண்டு, நேர்காணல் அடிப்படையிலான வேலை வாய்ப்புகள் மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு "தகுதி இல்லை" எனக் கூறி ஒதுக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.

மேலும் இப்பணியிடங்கள் பின்னர் இடஒதுக்கீட்டில் இருந்த விலக்கப்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே ஓபிசி மற்றும் பட்டியலின மக்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் இழைக்கப்படும் அநீதியை தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணிக் கட்சியான "ஆப்னா-தள்" கட்சியைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் அனுபிரியா பட்டேல், உத்தர பிரதேச அரசை விமர்சித்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories