இந்தியா

ரயில்வேயில் 1,52,734 பணியிடங்கள் : RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

ரயில் விபத்துகள் அன்றாட நிகழ்வாகி வரும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் மட்டும் ஒரு லட்சத்து 52 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக RTI மனு மூலம் தெரியவந்துள்ளது.

ரயில்வேயில் 1,52,734 பணியிடங்கள் : RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஒன்றிய பா.ஜ.க அரசின் 10 ஆண்டுகாள ஆட்சியில் ரயில்வே துறை மிகவும் மோசடைந்துள்ளது. காலிப்பணியிடங்களை நிரப்பாததால் அடிக்கடி ரயில் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் சோகத்தில் மூழ்கடித்தது.

தற்போது, ஜூன் 17 ஆம் தேதி மேற்குவங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலும், சரக்கு ரயிலும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இப்படி அடிக்கடி ரயில் விபத்துகள் அன்றாட நிகழ்வாகி வரும் நிலையில், ரயில்வே பாதுகாப்பு பிரிவில் மட்டும் ஒரு லட்சத்து 52 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக RTI மனு மூலம் தெரியவந்துள்ளது.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் ரயில்வே துறையில் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த விவரங்கள் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் காலியாக உள்ள லோகோ பைலட் பணியிடங்கள் குறித்த விவரங்களையும் அவர் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சகம் இவ்வாண்டு மார்ச் ஒன்றாம் தேதி நிலவரப்படி பாதுகாப்பு பிரிவில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 734 பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதாகவும், அனுமதிக்கப்பட்ட மொத்தம் 70 ஆயிரத்து 93 லோகோ பைலட் பணியிடங்களில் 14 ஆயிரத்து 429 லோகோ பைலட் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறை இந்த விஷயத்தில் கணிசமான முதலீடுகளை செய்துள்ளதாகவும், ரயில்வேயின் பல கட்டமைப்பு மற்றும் அமைப்பு ரீதியான மேம்பாடுகள் மூலமாக பாதுகாப்பான செயல்பாடுகளில் நேர்மறை தாக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories