இந்தியா

கார்ப்பரேட் நிறுவனத்துக்கு 2 பில்லியன் டாலர் கொடுத்த குஜராத் அரசு - அம்பலப்படுத்திய ஒன்றிய அமைச்சர் !

கார்ப்பரேட் நிறுவனத்துக்கு  2 பில்லியன் டாலர் கொடுத்த குஜராத் அரசு - அம்பலப்படுத்திய ஒன்றிய அமைச்சர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்தது. தொடர்ந்து கூட்டணி அமைச்சரவை பதவிக்கு வந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜேடி(எஸ்) கட்சித் தலைவர் எச்.டி.குமாரசாமி எஃகு மற்றும் கனரக தொழில்துறை அமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்சி தொண்டர்களிடையே குஜராத் அரசு குறித்து பேசிய கருத்து சர்ச்சையானது.

"குஜராத் அரசு அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோ சிப் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோன் டெக்னாலஜிக்கு வழங்கப்பட்ட மானியம் நியாயமானதாக தெரியவில்லைதொழில் தொடங்குவதற்கான மானியத் தொகையில் 80 சதவிகிதம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை"என்று கூறினார்.

Peter Alphonse
Peter Alphonse

அவரின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது இது குறித்து காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இதை கிண்டல் செய்துள்ளார். தனது சமூகவலைத்தள பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஒன்றிய அரசின் கனரக தொழில் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள குமாரசாமி ஒரு மாபெரும் உண்மையினை வெளியிட்டு ஒரு கேள்வியையும் கேட்டுள்ளார்.குஜராத்தில் செமிகண்டக்டர் தொழிற்சாலையினை

2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டில் மைக்ரான் டெக்னாலஜி எனும் அமெரிக்க கம்பெனி துவங்கியுள்ளது.இந்த 2.5 பில்லியன் டாலர் முதலீட்டில் 70% அதாவது 2 பில்லியன் டாலரை ஒன்றிய-மாநில அரசுகள் மானியமாக வழங்குகின்றன. இந்நிறுவனம் 5000 பேர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும். ஒரு நபருக்கான வேலைவாய்ப்புக்கு நமது அரசுகள் கொடுக்கும் தொகை₹ 3.5 கோடி.இது தேவையா என்று கேட்கிறார் குமாரசாமி.மற்ற மாநில அரசுகளுக்கு இதைப்போன்ற சலுகைகளை வழங்குமா மோடி அரசு?இவ்வளவு பணத்தையும் சிறு,குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு வழங்கினால் எத்தனை லட்சம் இந்தியர்களுக்கு வேலை கிடைக்கும்!சபாஷ்! குமாரசாமி.சரியான கேள்வி!"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories