இந்தியா

அமித் மாளவியா மீது பாலியல் புகார் : ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!

பா.ஜ.க நிர்வாகி அமித் மாளவியா மீது ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி பாலியல் புகார் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித் மாளவியா மீது பாலியல் புகார் : ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க கட்சியின் IT பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.

அப்போது பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ். எஸ் நிர்வாகி ஒருவர் பா.ஜ.கவின் மேலிடத்திற்கு புகார் எழுப்பியுள்ளார்.

மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் பா.ஜ.க நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அமித் மாளவியாவை பா.ஜ.கவில் இருந்து உடனே நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், ” பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவரான அமித் மாளவியா மீது பா.ஜ.க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.கவின் அனைத்து பதவிகளில இருந்தும் அவரை நீக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளை அறிய விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories