இந்தியா

சர்வாதிகாரத்தில் ஹிட்லரை முந்தி செல்ல நினைக்கிறாரா மோடி? : அதிகரிக்கும் சுய மோகம்!

தாயின் கரு அல்ல, கடவுளின் படைப்பு? மோடியின் ஆளுமையை நிறுவிட புது உத்தி!

சர்வாதிகாரத்தில் ஹிட்லரை முந்தி செல்ல நினைக்கிறாரா மோடி? : அதிகரிக்கும் சுய மோகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் பதவி வகிக்கும் மோடி, கடவுளுடன் தொடர்புடையவர்களாக தெரிவிக்கும் மற்ற சாமியார்களை மிஞ்சும் மிகப்பெரிய சாமியாராக உருமாற தன்னை ஆயத்தப்படுத்தி வருகிறார்.

அதற்கு அவர் தரும் நேர்காணல்களே, உதாரணங்களாகவும் இருக்கின்றன. அவ்வாறு அவர் கொடுத்த நேர்காணல்கள் சிலவற்றில், “பா.ஜ.க.விற்கு வாக்களிப்பவர்கள், என்னுடைய நல்ல செயல்களால் புன்னியம் பெறுவர்” என்றும், “என் அம்மா உயிரோடு இருக்கும் வரை, நானும் மற்றவர்களை போல தான் என எண்ணிக்கொண்டிருந்தேன்,

ஆனால், அவர்கள் மறைவுக்கு பின் தான், நான் பெற்ற ஆற்றல்களும், என் செயல்களும், உயிரியல் ரீதியானது அல்ல. கடவுளிடமிருந்து நேரடியாக பெற்றது என்பதை உணர்ந்து வருகிறேன். நான் செய்த செயல்கள் அனைத்தும், கடவுளின் நேரடி உந்துதலினால் தான் செய்து வருகிறேன், செய்யவும் இருக்கிறேன்” என்றும் சற்றும் தயக்கமின்றி பேசியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரண்டாவது விடைக்கு கேள்வி, “உங்களுக்கு சோர்வே கிடையாதா?” என்பது தான். சோர்வு கிடையாதா என கேட்கப்பட்டதற்கு கடவுளின் நேரடி படைப்பு தான் நான் என்கிற விடையை பார்வையாளர்கள் கண்டு சிரித்தாலும், நேர்காணல் செய்பவர்கள் சிரிப்பை அடக்கிக்கொண்டு தான் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

சர்வாதிகாரத்தில் ஹிட்லரை முந்தி செல்ல நினைக்கிறாரா மோடி? : அதிகரிக்கும் சுய மோகம்!

இந்த சூழலில், கடவுள் புரி ஜெகன்நாதரே, மோடியின் பக்தர் தான் என ஒரு படி மேல் சென்று, கூவியிருக்கிறார், மோடி கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா.

அதன் பின், புரி ஜெகன்நாதர் பின்பற்றாளர்களும், எதிர்க்கட்சி தலைவர்களும், இதற்கு கடும் கண்டனம் தர, வாய் தவறி சொல்லி விட்டதாக மன்னிப்பும் கேட்டுள்ளார் சம்பித் பத்ரா.

இதனிடையே, சர்ச்சையில் கட்டப்பட்ட ராமர் கோவிலை திறக்கும் இடத்திலும், மோடியே முன்னிறுத்தப்பட்டார். இதற்கு சில இந்துத்துவவாதிகளே மறுப்பு தெரிவித்த போதிலும், அதனை புறந்தள்ளி, அனைத்திற்கும் தலைவன் நான் தான் என்ற மனப்பான்மையை உலக அரங்கில் நிறுவினார் மோடி.

இத்தகைய செயல்களால், அதுவரை ஹிட்லருடன் ஒப்பிடப்பட்டு வந்த மோடி, தற்போது ஹிட்லரையே மிஞ்சிவிட்டாரோ என்று எண்ணும் அளவிற்கு, நிலைமை அளவு கடந்து செல்லத்தொடங்கியுள்ளது.

இது போன்ற பொய் முன்மொழிவுகளுக்கு, மோடி உறுதியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்தாலும், அதனை ஒரு பொருட்டாக கூட எண்ணாமல், கடவுள் அவதாரம் என சுற்றித்திரிந்து வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories