இந்தியா

சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு: பிரச்சாரம் செய்ய முடியாமல் தவிக்கும் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத்!

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க வேட்பாளர் கங்கனா ரனாவத்துக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

சொந்த தொகுதியிலேயே எதிர்ப்பு: பிரச்சாரம் செய்ய முடியாமல் தவிக்கும் பாஜக வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் 2006 ஆம் ஆண்டு ’கேங்ஸ்டர்” படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தமிழில் கூட 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ’தாம் தூம்’ படத்தில் நடித்திருந்தார்..

இப்படி சினிமாவில் பிசியாக இருந்த இவர் சில ஆண்டுகளாகவே பிரதமர் மோடியை ஆதரித்து சமூகலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தார். மேலும் அவ்வப்போது இவரது கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி விடும்.

தொடர்ந்து இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த நிலையில் மக்களை தேர்தலில் இவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அதன்படியே இந்த மக்களவை தேர்தலில் ஹிமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் நடிகை கங்கனா ரனாவத்தை வேட்பாளராக களமிறக்கியுள்ளது பா.ஜ.க. மேலும் இது இவரின் சொந்த தொகுதியும் கூட. வேட்பாளராக அறிவித்தை அடுத்து தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் கங்கனா ரனாவத் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், காசா பகுதியில் பிரச்சாரம் செய்ய கங்கனா ரனாவத் சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் பா.ஜ.கவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வேட்பாளர் கங்கனா ரனாவத் பிரச்சாரம் செய்யவிடாமல் கருப்பு கொடி காண்பித்து தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் பா.ஜ.கவினருக்கும், பொதுமக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலிஸார் கருப்பு கொடி காட்டிய மக்களை பிடித்தனர். இதையடுத்து அங்கு பதட்டமான சூழல் நிலவியது. பின்னர் பிரச்சாரம் செய்ய முடியாமல் பா.ஜ.க வேட்பாளர் நடிகை கங்கனா ரனாவத் அங்கிருந்து திரும்பிச் சென்றார்.

banner

Related Stories

Related Stories