இந்தியா

செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு : அண்ணன் செய்த அதிர்ச்சி செயல்!

செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதில் ஏற்பட்ட சண்டையில் தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறு : அண்ணன் செய்த அதிர்ச்சி செயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பெங்களூரு நேரிகா பகுதியைச் சேர்ந்ததவர் சிவக்குமார். இவரது சகோதரர் பிரனீஷ் (18). இந்நிலையில் சிறுவன் பிரனீஷ் தனது அண்ணன் செல்போனில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது சிவக்குமார் தனது செல்போனை தரும்படி கூறியுள்ளார். ஆனால் பிரனீஷ் செல்போனை கொடுக்கவில்லை. இதனால் வீட்டில் இருந்த கத்தியை காட்டி செல்போனை கேட்டுள்ளார். அப்போதும் தம்பி செல்போனை கொடுக்கவில்லை

இதனால் ஆவேசமடைந்த சிவக்குமார் தம்பி என்றும் பாராமல் கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு பலமுறை குத்தியுள்ளார். இதில் சிறுவன் பிரனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிறகு அங்கு வந்த போலிஸார் சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து சகோதரர் சிவக்குமாரை கைது செய்தனர்.

செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதில் ஏற்பட்ட சண்டையில் தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories