இந்தியா

இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !

நீதிமன்ற அனுமதி பெற்றுதான் அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது,

இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அரசியல் பழிவாங்கும் நோக்கோடு எதிர்க்கட்சியினர் மீது பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அமலாக்கத்துறை மூலம் ஒன்றிய பாஜக அரசு கைது செய்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சியினர் அனைவரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், அமலாக்கத்துறையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது, அவ்வழக்கில் தொடர்புடையோரை அமலாக்கத்துறை கைது செய்வது தவறு என்றும், அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

எந்த காரணத்தையும் தெரிவிக்காமல் ஒருவரை கைது செய்யும் அமலாக்கத்துறையின் சட்டப்பிரிவு 44ஐ நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்மன் அனுப்பி ஒருவர் ஆஜராகவில்லை என்றாலோ, அது தொடர்பான நீதி மன்றத்தில் நிலுவையில் இருந்தாலோ அவரை அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இனி அனுமதி இன்றி யாரையும் கைது செய்ய முடியாது : அமலாக்கத்துறைக்கு கட்டுப்பாடு விதித்த உச்சநீதிமன்றம் !

அமலாக்கத்துறை சட்டப்பிரிவு 44-ஐ எதிர்த்து சிறப்பு நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்- தால் அவரையும் அமலாக்கத்துறை கைது செய்ய முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நினைத்தால், நீதிமன்ற அனுமதி பெற்றுதான் அவரை காவலில் எடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

அதோடு இதற்காக சம்பந்தப்பட்ட நீதி மன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒருவரை காவலில் எடுப்பதற்கான காரணங்கள் குறித்து சிறப்பு நீதிமன்றம் ஆய்வு செய்து அமலாக்கத்துறை மனு மீது முடிவு எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories