இந்தியா

பாஜகவுக்கு எதிராக ராஜஸ்தானிலும் ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் : நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு!

குஜராத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்திலும் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தை ராஜ்புத் சமூகத்தினர் தொடங்கி உள்ளனர்.

பாஜகவுக்கு எதிராக ராஜஸ்தானிலும் ராஜ்புத் சமூகத்தினர் போராட்டம் : நாடு முழுவதும் வலுக்கும் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குஜராத்தை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் புருசோத்தம் ரூபாலா கடந்த மாதம் 22ம் தேதி ராஜ்புத் ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களுடன் இணைந்து செயல்பட்டார்கள் என ஒரு நிகழ்ச்சியில் பேசினார்.

அத்துடன், ராஜபுத் ஆட்சியாளர்கள் தங்களது வீட்டு பெண்களை ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். பா.ஜ.க. அமைச்சரின் இந்த பேச்சுக்கு ராஜபுத் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ராஜ்கோட் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் ரூபாலாவை மாற்றவேண்டும் என்று ராஜபுத் சமுதாய தலைவர்கள் கோரிக்கை வருகின்றனர். பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டம் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலும் பா.ஜ.க.வுக்கு எதிரான போராட்டத்தை ராஜபுத் சமூகத்தினர் தொடங்கி உள்ளனர்.

சித்தோர்கர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று அக்னி முன்பாக அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

அதேபோல் 10 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் மோடி அரசுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தின் பத்தின்டா தொகுதி பா.ஜ.க வேட்பாளர் பிரீத் கவுரை முற்றுகையிட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலை வாக்குறுதி என்ன ஆனது? டெல்லி முற்றுகை போராட்டத்தின் போது விவசாயி சுபகரன் சிங் ஏன் கொல்லப்பட்டார்?. ஏன் போராட்டம் நடத்த பா.ஜ.க அனுமதி மறுக்கிறது என விவசாயிகள் அடுக்கடுக்காக கேள்விளை எழுப்பினர்.

banner

Related Stories

Related Stories