இந்தியா

உலக சிக்கல்களை கருத்தில் கொள்ளுவதாக காடிக்கொள்ளும் மோடி : உள்ளூர் மக்களை வஞ்சிப்பது மட்டும் குறையவில்லை!

மற்ற நாடுகளுக்கு காட்டும் கருணையை, சொந்த நாட்டு மக்களுக்கு காட்டினால், இந்தியா வளர்ச்சியடையும் என்கிற அளவிற்கு வளர்ந்து வரும் மோடியின் கண்டிக்கத்தக்க போக்கு!

உலக சிக்கல்களை கருத்தில் கொள்ளுவதாக காடிக்கொள்ளும் மோடி : உள்ளூர் மக்களை வஞ்சிப்பது மட்டும் குறையவில்லை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தேர்தலின் போது மட்டும் உள்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் 75 முறை வெளிநாடு சுற்றுப்பயணம் மெற்கொண்டுள்ளார்.

இதனாலோ, என்னவோ பிரதமர் மோடிக்கு, சொந்த நாட்டை விட, மற்ற நாடுகளின் மீது தான் கூடுதல் அக்கரை இருக்கிறது.

அது வெளிநாடுகளில் இருக்கும் போதும் சரி, இந்தியாவிற்குள் இருக்கும் போதும் சரி, வெளிநாடுகளுக்கு கொடுக்கின்ற முன்னுரிமை, இந்திய மண்ணிற்கும் இல்லை. மக்களுக்கும் இல்லை.

அதன் வெளிப்பாடகவே, இந்திய மண்ணை சீனா பறித்துக்கொள்ளும் போதும் சரி, இந்திய மக்கள் அண்டை நாடுகளிடம் வஞ்சிக்கப்படும் போதும் சரி, சொந்த மண்ணில் எளிய மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்படும் போதும் சரி, தெரியாமல் கூட வாய் திறந்துவிடாமல் அமைதி காத்து வருகிறார் மோடி.

மோடியின் இந்த நடைமுறை, பிரதமராக பதவியேற்றபின் உருவானது அல்ல. அவர் குஜராத்தின் முதல்வராக இருக்கும் போதிலிருந்தே இருக்கின்ற நடைமுறை தான்.

உலக சிக்கல்களை கருத்தில் கொள்ளுவதாக காடிக்கொள்ளும் மோடி : உள்ளூர் மக்களை வஞ்சிப்பது மட்டும் குறையவில்லை!

2002ஆம் ஆண்டு, குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது, இஸ்லாமியர்களுக்கும், இந்துத்துவவாதிகளுக்கும் இடையே கலவரம் உண்டாகியபோது கூட, இஸ்லாமியர்களை கொல்லவிட்டு வேடிக்கை பார்த்தார்.

அதையே, தற்போது மணிப்பூர் கலவரத்திலும், அல்துவானி கலவரத்திலும் செய்து வருகிறார்.

கலவரங்கள் குறித்து பேசாதது மட்டுமல்ல. நாட்டில் எவ்வகை சிக்கல் எழுந்தாலும், அதற்கு முற்றிலும் தொடர்பில்லாமல், சிக்கல் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு, எது குறித்தும் கருத்து தெரிவிக்காமல் சாதித்து வருகிறார்.

மேலும், கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது கொடுத்த செய்தியாளர் சந்திப்பால், இப்போதைய அளவிலும் சிக்கல்களை சந்தித்து வரும் மோடி. பிரதமரான பின் ஒரு செய்தியாளர் சந்திப்பு கூட இல்லாமல், மற்றொரு சாதனையையும் புரிந்து வருகிறார்.

அவரைப் பொறுத்தவரை, இந்திய அரசியலுக்கும், அவருக்கும் தொடர்பில்லை. அவர் பேசுவது இரண்டு குறித்து தான், ஒன்று வெளிநாட்டு செய்தி, மற்றொன்று இந்தியாவில் நிகழாத ஒன்றை இந்தியாவில் நிகழ்வது போல எண்ணிக்கொண்டு பேசுவது.

இது போன்ற பிரதமர் ஆட்சியில் இருந்து கொண்டு, அவரது கட்சிக்காரர்கள், மோடிக்கு முற்றிலும் மாறுபட்ட, பேச்சுகளில் குறைவாகவும், செயல்களில் அதிகமாகவும் செல்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது, எவ்விதத்தில் சரியாக இருக்கும் என நெட்டிசன்கள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories