
இந்தியாவை சேர்ந்த தம்பதியினர் தற்போது நேபாளத்தில் பணி நிமித்தம் தங்கியுள்ளனர். இவர்களின் 15 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மும்பையை சேர்ந்த 22 வயதுடைய நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
ஒருவரும் தங்கள் நம்பர்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்துள்ளனர். இதனிடையே அந்த நபர் அந்த சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும், அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். மேலும், தன்னை சந்திக்க மும்பை வரவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இதற்கு அந்த சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண் மும்பை வர சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 17-ம் தேதி தனது பெற்றோருக்கு தெரியாமல் அந்த சிறுமி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேபாளத்தில் இருந்து பஸ் மூலம் உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் வந்த சிறுமி, பின்னர் அங்கிருந்து ரயில் மூலம் மும்பை வந்துள்ளார். மும்பையில் அந்த சிறுமியை சந்தித்த அந்த நபர், அவரை தனது வீட்டுக்கு அழைத்துசென்றுள்ளார். அங்கு அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதன் பின்னர் சிறுமியை அங்குள்ள ரயில் நிலையத்தில் விட்டு சென்றுள்ளார். இதனிடையே ரயில் நிலையத்தில் தனிமையில் இருந்த சிறுமியிடம் போலிஸார் விசாரணை நடத்தியபோது இந்த அதிர்ச்சி சம்பவம் வெளியே வந்தது. அதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரின் மொபைல் எண் மூலம் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.








