இந்தியா

SBI-வங்கியா? அல்லது பா.ஜ.க-வின் கிளையா? : இச்செயலை முதலில் தண்டிக்கப்போவது நீதிமன்றமா? மக்கள் மன்றமா?

ஏப்ரல் - மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிற நிலையில், தேர்தல் பத்திரம் தொடர்பான தரவுகள் வெளியானால், வாக்குகள் இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பா.ஜ.க.

SBI-வங்கியா? அல்லது பா.ஜ.க-வின் கிளையா? : இச்செயலை முதலில் தண்டிக்கப்போவது நீதிமன்றமா? மக்கள் மன்றமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மோடியின் முழக்கங்களில், மிக முக்கியமானது டிஜிட்டல் இந்தியா முழக்கம். சாலையோர தேநீர் கடையில் தொடங்கி எல்லா இடங்களிலும் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை உருவாக்கியதே, எங்கள் சாதனை என தம்பட்டம் அடித்து வருகிறார் மோடி.

ஏழை, எளிய மக்கள் அனைவருக்குமே இந்தியாவில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த அளவிற்கு மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ முழக்கத்தால் மக்கள் அழைக்களிக்கப்பட்டுள்ளனர்.

மக்கள் இத்தனை துன்புறுத்தி அந்த திட்டத்தை அவர்கள் நிறைவேற்றுவதற்கு காரணம் பணக்காரர்களுக்கும், முதலாளிகளுக்கும் சேவை செய்வதற்காகவே.

அவ்வரிசையில் மிகவும் சிக்கல் வாய்ந்த ஒரு திட்டம், தேர்தல் பத்திரம் முறை, இந்த நடைமுறை மூலம், அங்கீகாரம் பெற்ற தேர்தல் கட்சிகளுக்கு, SBI வங்கி வழியே, யார் வேண்டுமானாலும் நன்கொடை வழங்கலாம். அந்த நன்கொடை எவ்வளவு பெரிய தொகையாகவும் இருக்கலாம். பாதுகாப்பு கருதி நன்கொடை வழங்குபவர்களின் விவரம் பொது வெளியில் வெளியிடப்படாது எனவும் வரையறுக்கப்பட்டது.

2018 முதல் இத்திட்டம் செயல்முறைக்கு வந்ததது. பா.ஜ.க-வும் பணக்குவியலில் மூழ்கியது. ஆதலால், இந்த திட்டத்தின் தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தனர். எனினும், இச்சிக்கல் பொது வெளியில் அம்பலமாகமலேயே நீடித்து வந்தது.

இந்நிலையில், சில வாரங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், பா.ஜ.க. பெற்ற நன்கொடை, மற்ற கட்சிகள் பெற்ற நன்கொடையை விட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது என்ற தகவல் பதிவிடப்பட்டிருந்தது சர்ச்சையானது .

இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது, உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கை விசாரித்த முதன்மை நீதிபதி டி. ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, “தேர்தல் பத்திரம் முறை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது. வெளிப்படையான அரசிற்கு எதிரானது” என கூறி, தேர்தல் பத்திரம் முறையை நீக்கினர்.

SBI-வங்கியா? அல்லது பா.ஜ.க-வின் கிளையா? : இச்செயலை முதலில் தண்டிக்கப்போவது நீதிமன்றமா? மக்கள் மன்றமா?

மேலும், தேர்தல் பத்திரத்திற்கு நன்கொடை கொடுத்தவர்களின் தரவுகளை, வரும் மார்ச் 6 ஆம் நாளுக்குள் இணையதள பக்கத்தில் பதிவிட வேண்டும். அது மக்கள் காணக்கூடிய அளவில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தனர்.

இந்த வரலாறு சிறப்புமிக்க தீர்ப்பிற்கு தேசிய அளவில் பாராட்டுகள் குவிந்தன. இதனைத் தொடர்ந்து, நாளை (6.3.24) தேர்தல் பத்திரம் முறை மூலம் நன்கொடை வழங்கியவர்கள் குறித்த தகவல்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து தப்பித்து கொள்ள புது உத்தியை கையாண்டுள்ளது பா.ஜ.க.

தேர்தல் பத்திரம் முறையை நிர்வகித்து வந்த SBI வங்கியைக் கொண்டு, “உச்சநீதிமன்றம் கோரிக்கையின் படி, நன்கொடை கொடுத்தவர்கள் தகவல் வெளியிட, காலக்கெடுவை ஜுன் 30 வரை நீட்டிக்க வேண்டும்” என மேல்முறையீடு செய்துள்ளது.

இது குறித்து, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், நாடாளுமன்ற தேர்தல் மே மாதத்திற்குள் முடிவடையும் சூழலில், தற்போது தேர்தல் பத்திரத்தின் தகவல்கள் வெளியானால், ஊழல் மற்றும் முதலாளித்துவத்தை தூக்கிப்பிக்கும் அரசாக பா.ஜ.க இருக்கிறது என்பது தெரிந்துவிடும். இதனால் வாக்குகள் குறைந்துவிடும் என்ற அச்சத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார்.

பிரபல யூடூபர் மேகநாதன், “500 -1000 ரூபாய்கள் செயலிழக்க செய்த போது காலக்கெடு நீட்டிப்பு கேட்காத SBI, தற்போது கேட்டிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது” என்றும் கேளியடித்துள்ளார்.

ஆனால், இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான நகைச்சுவை என்னவென்றால் ’டிஜிட்டல் இந்தியா’-விற்கு மக்கள் எல்லாம் மாறிய பிறகும், நாட்டின் உயரிய வங்கியான SBI- மாறாமல் இருப்பது தான்.

இது குறித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “சுமார் அரைமணி நேரத்தில் வழங்க இயலும் தரவுகளை, தற்போது வழங்க முடியாது என இறுமாப்பாக சொல்லி இருக்கிறது அந்த வங்கி” என கண்டனம் தெரிவித்துள்ளார்

வங்கியின் இந்த நடவடிக்கைகளை எல்லாம் பார்க்கும் போது கொலை நடுங்கிறது என்று அமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் ராஜன் அவர்களும் பேட்டியளித்துள்ளார். தவறு என்று தெரிந்தும் துணிச்சலாக தவறிழைக்கும், இந்த கும்பலை நீதிமன்றம் தண்டிப்பதற்கு முன் கண்டிப்பாக மக்கள் மன்றம் தண்டித்தே தீரும்.!

banner

Related Stories

Related Stories