இந்தியா

டெல்லி எல்லையில் குவிந்து வரும் விவசாயிகள் : பீதியில் மிரட்டல் விடுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!

தடையை மீறி டெல்லியில் போராட்டம் நடத்தினால் விவசாயிகளின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் என ஒன்றிய பா.ஜ.க அரசு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

டெல்லி எல்லையில் குவிந்து வரும் விவசாயிகள் : பீதியில் மிரட்டல் விடுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020 ஆம் ஆண்டு ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்த மூன்று கருப்பு வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் எழுச்சி மிக்க போராட்டத்தை நடத்தினர். விவசாயிகள் போராட்டத்தை ஒன்றிய அரசு பல வழிகளில் ஒடுக்கப்பார்த்தது.

ஆனால் ஒரு வருடத்திற்கு மேலாக கடும் குளிர், மழை, தடியடி, உயிரிழப்புகள் என அனைத்தையும் தாங்கி ஒன்றிய அரசை தங்களது கோரிக்கைக்குப் பணியவைத்தார்கள் விவசாயிகள். இதன் விளைவு மூன்று கருப்பு வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தியது.

பிறகு பேச்சுவார்த்தையில் ஒப்புக் கொண்டபடி எதையும் ஒன்றிய அரசு நிறைவேற்றிக் கொடுக்கவில்லை. இந்நிலையில் மீண்டும் டெல்லியை நோக்கி பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் விவசாயிகள் போராட்டத்தைக் கையில் எடுத்துள்ளனர். இன்று டெல்லியில் முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

இதையடுத்து டெல்லி எல்லையில் விவசாயிகள் குவிந்து வருகிறார்கள். மேலும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழையவிடாமல் சாலைகளில் தடுப்புகளை, இரும்பு வேலிகள் அமைத்து, ஆணிகளை அடித்து தனது பாசிச முகத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு காட்டியுள்ளது.

இருப்பினும் ஆறுகள் வழியாக டெல்லிக்குள் விவசாயிகள் படையெடுத்து வருகிறார்கள். இதனால் அச்சமடைந்த ஒன்றிய அரசு, தடையை மீறி டெல்லியில் போராட்டம் நடத்தினால் விவசாயிகளின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்படும் மற்றும் டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படும் என ஒன்றிய பா.ஜ.க அரசு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது.

இருந்தபோதும் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என்று பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் விவசாயிகளின் இந்த போராட்டம் மிகுந்த கவனத்தை பெறுவதாக அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories