இந்தியா

நிதி பங்கீட்டின் மூலம் தென் மாநிலங்களை பழிவாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு: போராட்ட களத்தில் மாநில அரசுகள்!

“வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது” என்றார் பேரறிஞர் அண்ணா. தென்மாநில மக்களின் வரிப் பணத்தால் இன்றும் வடக்கு வாழ்ந்து கொழிக்கிறது.

நிதி பங்கீட்டின் மூலம் தென் மாநிலங்களை  பழிவாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு: போராட்ட களத்தில் மாநில அரசுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்கள் இருக்கிறது. அதில் ஒன்றிய அரசின் மொத்த நிதி வருமானத்தில், தென்மாநிலங்களின் பங்கு அதிகளவில் இருக்கிறது.

வட மாநிலங்களில் மக்கள் தொகை அதிகமாக இருப்பினும், கல்வி, தொழில், சமூக நீதி ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதால், GST உள்ளிட்ட வரி செலுத்துவதில்ல அதன் பங்கு குறைவாகவே இருக்கிறது.

இருப்பினும் ஒன்றிய அரசின் மாநிலங்களுக்கான நிதிபகிர்வில் பா.ஜ.க ஆளும் வட மாநிலங்களுக்கே, அதிகளவில் நிதி ஒதுக்கப்படுகிறது. நிதி வருவாயில் பெரும் பங்காற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு குறைந்த அளவிலான நிதியே பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இது குறித்து, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறுகையில், “2014-15 நிதியாண்டிலிருந்து 2021 - 22 வரை, தமிழ்நாட்டிலிருந்து வரி வருவாயாக ஒன்றிய அரசு பெற்ற தொகை ரூ. 5.16 லட்சம் கோடி. ஆனால், மாநில பகிர்வில் தமிழ்நாடு பெற்ற தொகை வெறும் ரூ. 2.08 லட்சம் கோடி தான்.”

நிதி பங்கீட்டின் மூலம் தென் மாநிலங்களை  பழிவாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு: போராட்ட களத்தில் மாநில அரசுகள்!

“அதாவது தமிழ்நாடு கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், திருப்பி பெறப்படுவது 26 பைசாவாகவே உள்ளது. ஆனால், பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலம் வரியாக செலுத்திய தொகை ரூ. 2.24 லட்சம் கோடியாக இருக்கிற நிலையில், அம்மாநிலம் பெற்ற நிதி ரூ. 9.04 லட்சம் கோடி,” என்றும் தெரிவித்தார்.

இதே நிலைதான் மற்ற தென் மாநிலங்களிலும் உள்ளது. இது குறித்து பல்வேறு கோரிக்கைகளை கடிதங்கள், நாடாளுமன்ற உரைகள் வழியாக தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிரதமரை நேரில் சந்தித்து கூறிய போதும், நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வெற்று வார்த்தையே பதிலாக கிடைத்துள்ளது.

அதனைக் கண்டிக்கும் வகையில் தென் மாநிலங்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது.அதன் ஒரு கட்டமாக இன்று (7.2.24) டெல்லியின் ஜந்தர் மந்தரில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் 100 எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட கர்நாடக அமைச்சரவையே போரட்டத்தை நடத்தியிருக்கிறது

நிதி பங்கீட்டின் மூலம் தென் மாநிலங்களை  பழிவாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு: போராட்ட களத்தில் மாநில அரசுகள்!

கேரளவில் ஆளும் சிபிஐ (எம்) அரசும் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு தி.மு.க முழு ஆதரவு தரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

எங்கள் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்கான ஒன்றிய அரசின் முயற்சியே இது என்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள் கடுமையாக குற்றம்சாட்டுகின்றனர்.

பா.ஜ.க எதிர்பார்பார்ப்பது இங்கு நடக்காது என்பதால், தென் மாநிலங்களிடம் ஒன்றிய அரசு ஒரவஞ்சனையோடு செயல்படுவது அப்பட்டமாக தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தை புறக்கணிப்பதாக நினைத்து மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கான நிதியினை நிறுத்தியிருப்பது வரும் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்

banner

Related Stories

Related Stories