இந்தியா

வெற்று வார்த்தைகள் நிறைந்த பட்ஜெட்: புதிதாக ஒன்றுமே இல்லை!

நிதி நெருக்கடி, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் சிக்கல், வேலைவாய்ப்பின்மை என எவ்வித நெருக்கடிக்கும் தீர்வு தராத பட்ஜெட்.

வெற்று வார்த்தைகள் நிறைந்த பட்ஜெட்: புதிதாக ஒன்றுமே இல்லை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் இறுதி பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த பட்ஜெட் உரையில், கடந்த ஆண்டுகளில் பாஜக செய்தவை என நீண்டவோர் உரையை அளித்தார் அவர். எனினும், நாட்டின் பொருளாதார சிக்கல்கள் தொடர்பான எதையும் உரை கொண்டிருக்கவில்லை.

இது குறித்து, ரவிசங்கர் பிரசாத், ராஜிவ் பிரதாப் உள்ளிட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள், “பாஜக கடந்து வந்த பாதை விவரிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின் சரியான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்,” எனக் கூறினர்.

இதற்கு விடையளிக்கும் வகையில், “இளைஞர்கள், பெண்கள், உழவர்கள் என யாருக்கான நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. இதுகுறித்து கேட்டால், தேர்தலுக்கு பின் தாக்கல் செய்வோம் என்கின்றனர். தேர்தலை முன் வைத்து எப்படி பட்ஜெட்டுக்கு விளக்கம் கொடுக்க முடியும்,” என அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் முறையிட்டுள்ளார்.

வெற்று வார்த்தைகள் நிறைந்த பட்ஜெட்: புதிதாக ஒன்றுமே இல்லை!

பாஜகவின் சாதனைகளாக நிதியமைச்சரால் கூறப்பட்ட பல செய்திகள், ஆய்வறிக்கைகளுக்கு முற்றும் புறம்பாக அமைந்துள்ளது. 25 கோடி வறுமையிலிருந்து மீண்டு விட்டனர், மக்களின் வாழ்வாதாரம் மேம்படுகிறது என தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

ஆனால், Wire மற்றும் New Indian Express உள்ளிட்ட செய்தி ஊடகங்களின் ஆய்வுகளில் உண்மை வெளிப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டின் வேலைவாய்ப்பு விழுக்காடு சரிந்து கொண்டே செல்கிறது. வேளாண் துறையில் அதிகரிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு காலநிலை சார்ந்தது. இந்த சூழலில் மக்களின் வாழ்வாதாரம் எந்த வகையில் மீண்டிருக்க இயலும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மேலும், மக்களின் வருமானம் 50% உயர்ந்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தேசிய புள்ளியியல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மக்களின் மாத வருமானம் 10 - 12 ஆயிரமாக உள்ளது. பாஜக ஆட்சியில் GST, பணவீக்கம் (INFLATION) உள்ளிட்டவையை வைத்து கணக்கிடுகையில், மாதத்திற்கு 10 - 12 ஆயிரம் ரூபாய் என்பது போதாத வருமானமாகத்தான் இருக்கிறது.

இவை மட்டுமின்றி, 2 கோடி வீடுகள் கட்டித்தருவதாகவும் உறுதியளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன், பீகார் மாநிலத்தில் சுமார் 13 லட்சம் குடும்பங்கள், வீடு கட்டித்தரப்படும் என்ற எண்ணத்தில் 3 ஆண்டுகளாக காத்திருப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது போன்று முன்பு உறுதியளித்த வீடுகளே கட்டிமுடிக்கப்படாத நிலையில், அதிகப்படியாக 2 கோடி வீடுகள் என்ற வாக்குறுதி யதாரத்தத்துக்கு புறம்பாகவே இருக்கும்.

“வெளிநாட்டு மூலதனத்தைப் பற்றி பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் ஒட்டுமொத்த மூலதனத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதை உணரவில்லை. மேலும், நாட்டின் முக்கிய நிதி சிக்கல்களை சுட்டிக்காட்டாவுமில்லை,” என்று காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து மூன்றாவது முறையும் வென்றுவிடலாம் என்ற கனவில், நிகழ்கால சிக்கல்களை வழக்கம் போல் கண்டும், காணாமல் கடந்திருக்கிறது பாஜக.

banner

Related Stories

Related Stories