இந்தியா

“மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக போற்றப்படுவது ஏன்?” - ஆளுநர் RN.ரவிக்கு EMS கட்டுரையில் இருந்து பதிலடி!

காந்தியின் போராட்டத்தால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி காந்திஜியை சிறுமைப்படுத்திப் பேசியதற்கு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டின் இந்தக் கட்டுரை பதிலாக அமைந்துள்ளது.

“மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக போற்றப்படுவது ஏன்?” - ஆளுநர் RN.ரவிக்கு EMS கட்டுரையில் இருந்து பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மார்க்சியப் பேரறிஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்களில் ஒருவருமான இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்கள் மலையாளத்தில் எழுதிய “காலத்தின்றெ நேர்க்குப்பிடிச்ச கண்ணாடி” என்ற கட்டுரைகள் தொகுப்பு நூலில் உள்ள “தேசப்பிதா விவாதம்” என்ற கட்டுரையின் தமிழாக்கம் இது. இந்தக் கட்டுரை 1992 நவம்பரில் எழுதப்பட்டது. “காந்தியின் போராட்டத்தால் இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை” என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி காந்திஜியை சிறுமைப்படுத்திப் பேசியதற்கு இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் அவர்களின் இந்தக் கட்டுரை அதிரடி பதிலாக அமைந்துள்ளது.

இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே ‘தேசத்தந்தை’ என்று பெயர் பெற்றார் மகாத்மா காந்தி. பிறகு அது மக்களிடம் விரிவாகப் பரவியது. ஆனால், தேசத்தந்தை என்பது இன்று (1992) கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தின் பாஜக முதலமைச்சர் கல்யாண் சிங்தான் இதை ஆரம்பித்துவைத்தார்.

அவரது கட்சியின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான ஓ.ராஜகோபால் அந்த விவாதத்தை ஏற்றெடுத்து விரிவாக்கினார். ஆயிரக்கணக் கான ஆண்டுகளாக நிலைநிற்கிற ஒரு தேசத்திற்கு 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிறந்த ஒருவர் எவ்வாறு ‘பிதாவாக’ ஆவார் என்பதுதான் அவரது கேள்வி.

தந்தை அல்லது பிதா என்ற சொல்லை அதன் நேரடி அர்த்தத்தில் மட்டுமே வைத்துப் பயன்படுத்துவதென்றால் எந்த நூற்றாண்டில் பிறந்தவராக இருந்தாலும் ஒரு மனிதர் அவர் பிறந்த நாட்டின் ‘பிதாவாக’ ஆகமுடியாது. அந்நிலையில் ‘தேசத்தந்தை’ என்ற மனதின் சித்திரமே பொருளற்றுப் போகும். பல நாடுகளிலும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களிலேயே மிகப்புகழ்பெற்ற ஒருவரை ‘தேசப்பிதா’வாகச் சிறப்பிப்பது உண்டு. அந்த அர்த்தத்தில் காந்திஜியை ‘தேசத்தந்தை’ என்று பாஜகவினரைப் போன்ற இந்துத்துவா அரசியல்வாதிகளைத் தவிர மற்ற எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள்.

“மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக போற்றப்படுவது ஏன்?” - ஆளுநர் RN.ரவிக்கு EMS கட்டுரையில் இருந்து பதிலடி!

‘இந்தியா’ என்ற தேசம்...

புவியியலின்படிப் பார்த்தால் இன்றைய இந்தியாவுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டு களின் பழமை உண்டு என்பது சரிதான். ஆனால், மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் இறுதிக் ட்டத்தை எட்டுகிறவரை இந்த நாட்டில் வாழ்ந்த வர்கள் ஒன்றிணைந்த மக்கள் சமூகமாக இருக்க வில்லை.

எண்ணற்ற சாதிகளும் உபசாதிகளும் அவற்றின் ஒரு பிரத்தியேக வடிவமான இன மக்கள் பிரிவுகளும், இந்து மதமும் அல்லாதது மான சில மதச்சமூகங்களைச் சேர்ந்தவர் களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர் களும் மற்றவர்களுமாக மக்கள் வாழ்ந்தனர்.

அவற்றின் மீது சில ஒன்றுபடுத்தப்பட்ட அரசு அமைப்புகள் - அதாவது– மௌரிய சாம்ராஜ்யம் முதல் முகலாய சாம்ராஜ்யம் வரை – நிலைபெற்றிருந்தாலும், அது கீழ் நிலை யில் இருந்த மக்களின் வாழ்க்கையை எவ்விதத் திலும் பாதிக்கவில்லை. நிர்வாக ரீதியாகவே மேல்தட்டில் இருந்த சாம்ராஜ்யங்களின் கீழ் பல்வேறு குறுநில மன்னர்களும் அவர்களின் நிர்வாகத்திலுள்ள பிரதேசங்களும் இருந்தன. ஐரோப்பியக் கம்பெனிகளின் வருகை வரை யிலும் அவர்களுக்கிடையே மோதல்களும் போர்களுமாக இருந்தன.

இதுதான் இந்திய அரசியல் வாழ்க்கையின் மையமாக இருந்தது. இந்த நிலைமையில் ஒரு மாற்றம் ஏற்பட்டது பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான். அன்றுதான் இமயம் முதல் கன்னியாகுமரி வரையும், அர பிக்கடல் முதல் வங்கக் கடல்வரையும் நீண்டு நிற்கிற இந்திய நாட்டுக்கு அரசியல் ரீதியாக வும் நிர்வாக ரீதியாகவும் ஐக்கியம் உண்டானது. அந்நிய ஆட்சியில் ஏற்பட்ட ஐக்கியம் ஒரு புவிப்பிரதேசத்தை ஒரு ‘தேசம்’ ஆக மாற்று மென்றால் பிரிட்டிஷ் அரசுதான் இந்தியா என்ற தேசத்தை உருவாக்கியது.

“மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக போற்றப்படுவது ஏன்?” - ஆளுநர் RN.ரவிக்கு EMS கட்டுரையில் இருந்து பதிலடி!

தேசிய எழுச்சி

ஆனால், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த ‘இந்திய தேச’த்திற்கு மக்கள் சார்ந்த எவ்வித அஸ்திவாரமும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சி இங்குக் காலூன்ற ஆரம்பித்தது முதல் தெற்கே திருவிதாங்கூர் முதல் நாடெங்கும் மக்களின் ஆயுதம் ஏந்திய எதிர்ப்பு உருவானது. அதன் மிக விரிவான வெளிப்பாடுதான் 1857-58 ஆண்டில் தில்லியிலும் அதன் சுற்றுப்பிர தேசங்களிலும் நடைபெற்ற சிப்பாய்க் கலகமும் தேசிய எழுச்சியும்.

அது அடக்கப்பட்டுக் கால்நூற்றாண்டுக் காலம் கடந்த பிறகு ஆதிக்க நாடாகிய இங்கி லாந்தில் நடந்தது போலவே அடிமைப்பட்ட நாடாகிய இந்தியாவிலும் நவீன வரலாற்றியல் அங்கீகரிக்கிற தேசியப் போராட்ட இயக்கத்தின் கருவியாக இந்திய தேசிய காங்கிரஸ் உரு வானது. அதைத் தொடர்ந்துதான் இந்தத் தேசத்தின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைவரை வாழ்கிற பல்வேறு சாதி, மதத்தின ரும், பல்வேறு இனம், மொழியினரும் ஒரே யொரு “இந்திய தேச”மாக உயர ஆரம்பித்தனர்.

‘பால் - பால் - லால்’

இந்த நடைமுறையின் துவக்கத்தில் தேசத்துக் குறிக்கோளின் அர்த்தம் நவீன கல்வி பெற்ற மேல்தட்டுப் பிரபுக்களின், வசதி படைத்தவர்களின், உயர்சாதியினரின் சுதந்திர தாகமாக இருந்தது. அது படிப்படியாக ஏழை- எளிய விவசாய மக்களிடமும், மற்ற உழைக்கும் வெகுமக்களிடமும் பரவியது. இந்த மாற்றத் தைக் குறிக்கிற ஆரம்பத் தலைவர்களாக பால்-பால்-லால் என்ற மும்மூர்த்திகள்-அதாவது, பாலகங்காதர திலகரும், பிபின்சந்திர பாலும், லாலா லஜபதிராயும் இருந்தனர்.

“மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக போற்றப்படுவது ஏன்?” - ஆளுநர் RN.ரவிக்கு EMS கட்டுரையில் இருந்து பதிலடி!

இவர்கள் உருவாக்கிய புதிய தேசியப் போராட்ட இயக்கத்தின் மேலும் சற்று விரிவான வடிவ மாக இருந்தது மகாத்மா காந்தி தலைமை வகித்த சத்யாக்கிரக இயக்கம். இதன் ஆரம்ப மாக 1920-21-ல் நடைபெற்ற ஒத்துழையாமை - கிலாபத் இயக்கம் இருந்தது. அது தோல்வி யடைந்த பின்னர் புதிய உத்வேகத்துடன் நடை பெற்றவைதான் 1930-ல் உப்புச்சத்யாக்கிரக மும், அதைத் தொடர்ந்து 1932-ல் சட்ட மறுப்பு இயக்கமும், அடுத்து ஒரு பத்து ஆண்டுகளுக்கு பிறகு 1942-ல் ‘க்விட் இந்தியா’ (வெள்ளை யனே வெளியேறு) போராட்டமும் நடை பெற்றன. இந்தப் போராட்டத்தில் ஏற்படும் இடர்ப்பாடுகளிலும் துன்பத்திலும் எல்லாம் ‘தரித்திர நாராயணர்’கள் எனப்பட்ட வெகு மக்களை அணிவகுக்கச் செய்த மகத்தான பாரம் பரியத்தை மகாத்மா காந்தி உருவாக்கியிருந் தார். அதிலிருந்துதான் அவர் ‘மகாத்மா’ என்றும், ‘தேசப்பிதா’ என்றும் பெயர் பெற்றார்.

எத்தனை எத்தனை எழுச்சிகள்

காந்திஜி தலைமையிலான தேசியப் போராட்டத்திற்குப் பல கிளைவழிகளும் இருந் தன என்பது உண்மைதான். ‘பயங்கரவாத இயக்க’மென்று அதிகாரிகளால் எதிர்க்கப்பட்ட புரட்சி இயக்கம்; ‘எதிரியின் எதிரி நண்பன்’ என்ற கண்ணோட்டத்தின்படி பிரிட்டிஷார்க்கு எதிராகப் போராடுகிற ஐரோப்பிய சக்திகளின் உதவி யுடன் இந்தியாவை விடுதலைசெய்ய முதலா வது உலக யுத்த காலத்தில் நடந்த முயற்சிகள்; யுத்தத்தின் இறுதியில் கிலாபத் - ஒத்துழையாமை இயக்கத்திற்குச் சமமாக வளர்ந்த தொழிலாளி - விவசாயி இயக்கங்கள், சோஷலிஸ்ட், கம்யூ னிஸ்ட் கட்சிகள் முதலானவை வகித்த பங்கினை யாரும் நிராகரிக்க முடியாது.

காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற கடைசிப் போராட்டமாகிய வெள்ளையனே வெளி யேறு இயக்கத்தைத் தொடர்ந்து, புன்னப்புரா-வயலார் போராட்டம், தெலங்கானா புரட்சி உட்பட ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன. இரண்டாவது உலக மகா யுத்தத்தின் இறுதிக் காலத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் தலை மையில் உருவான இந்திய தேசிய இராணுவ மும் (ஐஎன்ஏ) 1946-ல் பம்பாயில் நடைபெற்ற கப்பற்படை எழுச்சியும், அதனுடன் சகோதர ஒரு மைப்பாடு தெரிவிக்கிற தொழிலாளரின் வேலை நிறுத்தமும் ஆகிய இவையெல்லாம் கிளைப் போராட்டங்களாக இருந்தன. இவை எல்லாம் சேர்ந்துதான் சுதந்திரப் போராட்ட இயக்கம் வளர்ந்தது; இறுதி வெற்றியும் பெற்றது.

“மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக போற்றப்படுவது ஏன்?” - ஆளுநர் RN.ரவிக்கு EMS கட்டுரையில் இருந்து பதிலடி!

உயர்ந்த ஸ்தானத்தில் காந்தி

இவ்வாறு பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்ட மக்களின் எழுச்சிதான் ‘இந்திய தேச’த்தை உருவாக்கியது. பிரிட்டிஷ் ஆட்சி யாளரின் துப்பாக்கிக்கும் வாளுக்கும் கீழே ஒன்றுசேர்ந்த இந்திய மக்கள் தேசியப் போராட்டத்திற்குரிய தார்மீக அரசியல் மதிப்பீடு களால் ஒன்றிணைக்கப்பட்ட ‘இந்திய மக்க ளாக’ உயர்ந்தனர். எந்தச் சாதியில் பிறந்தவ ராக இருந்தாலும், எந்த மதத்தின் மீது நம்பிக் கை உள்ளவராக இருந்தாலும், எந்த மதத்தின் மீதும் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், எந்த மொழியைப் பேசுபவராக இருந்தாலும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றே என்கிற உணர்வு - இதுவல்லவா தேசத்தின் அஸ்தி வாரம்! இது தேச சுதந்திரப் போராட்டத்தின் கட்ட மைப்புக்குள் உருவாகி வந்தது.

இதன் மகத்தான தலைவர்களில் மிக உயர்ந்த ஸ்தானம் வகிப்ப தால்தான் மகாத்மா காந்தி தேசத் தந்தையாகப் போற்றப்படுகிறார். இதில் பாஜகவினர்க்கும், அவர்களது ஆன்மீக குருக்களாகிய ஆர்எஸ்எஸ்காரர் களுக்கும் சிரமம் உண்டாவதைப் புரிந்து கொள்ளலாம். இந்தியர்களை இந்துக்கள் என்றும், இந்துக்கள் அல்லாதவர்கள் என்றும் பிளவுபடுத்தி மோதவிடுகிற அவர்களுக்கு இந்து-முஸ்லிம் ஒற்றுமை என்கிற மகாத்மா காந்தியின் மந்திரம் கஷ்டமாகத் தோன்றுகிறது. அதனால்தான் அவர்களைச் சேர்ந்த ஒரு நபர் மகாத்மாவைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இன்றோ, அவர்கள் மகாத்மா பெற்ற ‘தேசத் தந்தை’ என்ற ஸ்தானத்திற்கு எதிராக வாளோங்கியிருக்கிறார்கள்.

நன்றி : - தீக்கதிர்.

banner

Related Stories

Related Stories