இந்தியா

கடத்தப்பட்ட சிறுமி.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. 20 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் ! - பின்னணி என்ன?

டியூஷன் சென்ற 6 வயது சிறுமி கடத்தப்பட்டு, 20 மணி நேரத்தில் மீட்டுள்ள கேரள போலீசாருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

கடத்தப்பட்ட சிறுமி.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. 20 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் ! - பின்னணி என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் அமைந்துள்ளது ஓயூர் என்ற கிராமம். இங்கு வசித்து வரும் தம்பதிக்கு 8 வயதில் மகனும், 6 வயதில் மகளும் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் படித்து வரும் நிலையில், பள்ளி முடிந்து மாலை நேரத்தில் 2 பேரும் ஒன்றாக டியூசன் செல்வது வழக்கமாக இருந்துள்ளது.

பெற்றோர் இருவரும் வெவ்வேறு தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருவதால், சிறுவனும், சிறுமியும் தனியாக டியூசன் சென்று வந்துள்ளனர். இந்த சூழலில் நேற்று சுமார் 4 - 4.30 மணியளவில் இருவரும் வழக்கம்போல் டியூசன் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று இவர்கள் அருகில் நின்றுள்ளது.

அதில் இருந்த ஒருவர் சிறுவர்களுடன் பேச்சு கொடுத்த நிலையில், சட்டென்று சிறுமி கடத்தப்பட்டுள்ளார். பின்னர் கார் வேகமாக சென்ற நிலையில், சிறுவன் அந்த காரை பின் தொடர முயற்சித்துள்ளார். ஆனால் அவரால் முடியவில்லை என்பதால், வீட்டுக்கு திரும்பிய சிறுவன் சம்பவம் குறித்து பாட்டியிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு பதறிய பாட்டி, உடனடியாக சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

கடத்தப்பட்ட சிறுமி.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. 20 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் ! - பின்னணி என்ன?

இதையடுத்து விரைந்து வந்த அவர்கள், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து தங்கள் தேடுதல் வேட்டையை தொடங்கினர். ஆரம்பத்தில் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது சிறுமி கடத்தப்பட்டது அதில் பதிவாகியிருந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், வாகன சோதனைகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில், சிறுமியின் பெற்றோரின் அலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், சிறுமி உயிரோடு வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் வேண்டும் என்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

கடத்தப்பட்ட சிறுமி.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. 20 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் ! - பின்னணி என்ன?

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஃபோன் நம்பரை வைத்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது அது ஒரு பகுதியில் அமைந்துள்ள சிறிய கடை ஒன்றின் எண் என்று தெரியவந்தது. அங்கே சென்று விசாரிக்கையில், வேறு யாரோ அந்த நேரத்தில் போனை பயன்படுத்தியது தெரியவந்தது. பின்னர் கடைக்காரரிடம் அந்த மர்ம நபர்களின் அடையாளங்கள் குறித்து விசாரிக்கப்பட்டது.

மர்ம நபர்களின் அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட அதே நேரத்தில், சிறுமி குறித்த தகவல் கிடைத்தால் அதனை தெரிவிக்க ஒரு எண்ணும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில மணி நேரம் கழித்து சிறுமி கடத்தி செல்லப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரின் எண் போலி என்றும் தெரியவந்தது.

கடத்தப்பட்ட சிறுமி.. ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்.. 20 மணி நேரத்தில் மீட்ட போலிஸ் ! - பின்னணி என்ன?

தொடர்ந்து அந்த பகுதியில் முழுமையாக சோதனை செய்யப்பட்ட நிலையில், கொல்லம் ஆசிரமம் அருகே கடத்தப்பட்ட சிறுமி கண்டறியப்பட்டார். கடத்தப்பட்ட சிறுமி திடீரென சாலையில் தனியாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையல், கடத்தல்காரர்கள் பயத்தில் விட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார். பணத்திற்காக சிறுமி கடத்தப்பட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடத்தப்பட்ட சிறுமியை 20 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டுள்ள போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories