இந்தியா

பட்டியலின சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: உ.பி-யில் மீண்டும் மீண்டும் நடக்கும் சமூக அவலம்!

உத்தரபிரதேசத்தில் பட்டியலின சிறுவனை, சிறுநீர் குடிக்க இருவர் கட்டாயப்படுத்தியதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பட்டியலின சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: உ.பி-யில் மீண்டும் மீண்டும் நடக்கும் சமூக அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் 3 மாதங்களுக்கு முன்னர் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.

அதன்பின்னர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோவும், உ.பியில் தலித் இளைஞர் மீது மலம் பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது உத்தரபிரதேசத்தில் பட்டியலின சிறுவனை, சிறுநீர் குடிக்க இருவர் கட்டாயப்படுத்தியதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் ஜான்பூர் பகுதியில் உள்ள சுஜான்கஞ்ச் என்ற இடத்தில் 12ம் வகுப்பு படிக்கும் பட்டியலின சிறுவன் ஒருவரை அந்த பகுதியை சேர்ந்த இருவர் கடுமையாக தாக்கியுள்ளனர்.அதோடு நிற்காத அவர்கள், சிறுவனின் கண் புருவதையும் நீக்கியுள்ளனர்.

பட்டியலின சிறுவனை தாக்கி சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: உ.பி-யில் மீண்டும் மீண்டும் நடக்கும் சமூக அவலம்!

மேலும், அந்த சிறுவனை கட்டுப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் வெளியே தெரியவந்தது. தொடர்ந்து இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதே நேரம் சிறுவன் அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் தவறாக நடந்துகொள்ள முயன்றதாகவும், அதன் காரணமாகவே அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறு நடந்துகொண்டதாகவும் காவல் நிலையத்தில் பதில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories