இந்தியா

திடீரென பிரேக் பிடித்த ஓட்டுநர் : பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தெலங்கானா முதல்வரின் மகன் !

தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திடீரென பிரேக் பிடித்த ஓட்டுநர் : பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த தெலங்கானா முதல்வரின் மகன் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் நவம்பா் 30-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலம் தொடங்கியதில் இருந்து தற்போது வரை பிஆர்எஸ் கட்சியை சேர்ந்த சந்திர சேகர ராவ் முதலமைச்சராக உள்ளார்.

தெலங்கானாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சி பெரிதாக பேசப்படாத நிலையில், ராகுல் காந்தியின் யோடோ யாத்திரை தெலுங்கானாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு தெலங்கானாவில் காங்கிரஸ் அறிவித்த வாக்குறுதிகள் அங்கு நிலைமையை தலைக்கீழாக மாற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதனைத் தொடர்ந்து வெளியான கருத்து கணிப்பு முடிவுகளில் அங்கு காங்கிரஸ் கட்சி முதல்முறையாக ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டிருந்தது. இதன் காரணமாக அங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்கவைக்க தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் பிரச்சார வாகனத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனான கேடி ராமராவ் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கிறார்.

இவர் சிர்சிலா தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். அந்த வகையில் ஆர்மூர் என்ற பகுதியில் இன்று பிரசார வாகனத்தின் மேல் நின்றபடி அவரும் கட்சி பிரமுகர்களும் மக்களை பார்த்து கையசைத்த படி சென்றனர். அப்போது திடீரென டிரைவர் பிரேக் பிடித்ததில், வாகனத்தின் மீது நின்ற கேடி ராமராவ் உள்பட பலர் பிடித்திருந்த இரும்பு தடுப்பு முறிந்தது.

இதில் வாகனத்தில் இருந்த சிலர் கீழே விழுந்தனர். எனினும் கேடி ராமராவை அவரின் பின்னால் இருந்த பாதுகாவலர் கீழே விழாமல் பிடித்து கொண்டனர், எனினும், அவர் கீழே விழாமல் தொங்கியபடி கிடந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories