இந்தியா

நெறிமுறைக் குழுவின் ரகசிய அறிக்கை - அதானியின் டி.விக்கு எப்படி சென்றது? : மஹுவா மொய்த்ரா சரமாரி கேள்வி!

மக்களவையின் விதிமுறைகளும், செயல்பாடும் நிலைகுலைந்துள்ளது என மஹுவா மொய்த்ரா விமர்சித்துள்ளார்.

நெறிமுறைக் குழுவின் ரகசிய அறிக்கை - அதானியின் டி.விக்கு எப்படி சென்றது? : மஹுவா மொய்த்ரா சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் பிரதமர் மோடியின் கூட்டு சதியை, இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அதானி முறைகேடுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க செயல்படுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகிறார்கள்.

இப்படி அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் எம்.பிகள் மீது தொடர்ந்து குறிவைத்து அவர்களது குரல்களை ஒடுக்கப்பார்கிறார்கள். அதானி மற்றும் பிரதமர் மோடி விமானத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி கேள்வி எழுப்பினார்.

இதையடுத்து உப்புசப்பு இல்லாத வழக்கைக் காரணமாகக் காட்டி ராகுல் காந்தி இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் வரை சென்று போராடி இடைநீக்கத்தை திரும்பப்பெற வைத்தார். தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பா.ஜ.கவினர் குறிவைத்துள்ளனர்.

இவர் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் வாங்கியதாகப் பா.ஜ.கவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்த மஹுவா மொய்த்ரா, தன்மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

நெறிமுறைக் குழுவின் ரகசிய அறிக்கை - அதானியின் டி.விக்கு எப்படி சென்றது? : மஹுவா மொய்த்ரா சரமாரி கேள்வி!

மேலும், "நாடாளுமன்றத்தில் அதானி குறித்தும், பிரதமர் மோடி மற்றும் அதானியை இணைத்துப் பேசக்கூடாது என கடந்த மூன்று ஆண்டுகளில் 2 மக்களவை உறுப்பினர்கள் தன்னிடம் பேரம் பேசினார்கள். நான் இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டேன். யாரிடமும் பணம் வாங்கவில்லை. ஆனால் பா.ஜ.கவினர் பணம் வாங்கியதாக பொய் புகார்" தெரிவித்துள்ளனர் என அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற நெறிமுறைக் குழு விசாரணை அண்மையில் நடைபெற்றது. இதில் மஹுவா மொய்த்ரா ஆஜரானார். அப்போது அவரிடம் விசாரணைக் குழுவிலிருந்த பா.ஜ.கவினர், "இரவில் யாருடன் பேசுவீர்கள்?. எத்தனை முறை பேசுவீர்கள்?. நீங்கள் அந்த ஹோட்டலுக்கு அவருடன் போயிருக்கிறீர்களா?.

அங்கு தங்கியிருக்கிறீர்களா?. ஐந்து வருடங்களில் எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள்?. நீங்கள் ஒருவரை Dear Friend என் அழைக்கிறீர்கள். அவருடைய மனைவிக்கு இது தெரியுமா?" என அநாகரீகமான கேள்விகளைக் கேட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸின் உத்தம் குமார் ரெட்டி,பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலி, சிபிஎம் கட்சியின் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மஹுவாவுக்கு ஆதரவு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

நெறிமுறைக் குழுவின் ரகசிய அறிக்கை - அதானியின் டி.விக்கு எப்படி சென்றது? : மஹுவா மொய்த்ரா சரமாரி கேள்வி!

இந்நிலையில் மஹுவா மொய்த்ரா மீது நெறிமுறைக்குழு நடவடிக்கைக்கு அனுமதி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இதற்கிடையில் நெறிமுறைக்குழுவின் ரகசிய அறிக்கை அதானியின் செய்தி நிறுவனம் (NDTV) வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அதானி நிறுவனம் ரூ.13,000 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழலில் சிக்கி உள்ளது. நான் அதானிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருவதால் எனக்கு எதிரான நெறிமுறைக் குழுவின் ரகசிய அறிக்கை, அதானியின் செய்தி நிறுவனத்துக்கு (NDTV) சென்றுள்ளது. இதன் மூலம் மக்களவையின் விதிமுறைகளும், செயல்பாடும் நிலைகுலைந்துள்ளது என கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார் மஹுவா மொய்த்ரா.

banner

Related Stories

Related Stories