இந்தியா

மீண்டும் பெண் குழந்தை.. 6 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்தே கொன்ற மாமியார் ? - பீகாரில் அதிர்ச்சி !

3-வதாக மீண்டும் பெண் குழந்தை கருவில் இருந்ததால், 6 மாத கர்ப்பிணி மருமகளை அடித்தே கொன்ற மாமியார், கணவரின் செயல் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் பெண் குழந்தை.. 6 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்தே கொன்ற மாமியார் ? - பீகாரில் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகார் மாநிலத்தில் கேவ்வல் பிகா என்ற கிராமத்தை சேர்ந்தவர் உதய் செளகான். இவருக்கும் குசம் தேவி (30) என்ற இளம்பெண்ணுக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமானது. திருமணம் முடிந்த சில மாதங்களில் தேவி கர்ப்பமடைந்தார். தொடர்ந்து அவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அப்போதே அவர்கள் வீட்டில் குசம் தேவியை வசைபாடியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் கழித்து மீண்டும் கர்ப்பமடைந்தார். அப்போது அனைவரும் ஆண் பிள்ளை வேண்டும் என்று பெரிய ஆசையில் இருந்த நிலையில், அது பெண் குழந்தையாக பிறந்துள்ளது. இதனால் குடும்பமே அவர் மீது கடும் சினத்தில் இருந்துள்ளது. குறிப்பாக மாமியார் கொடுமைகளை செய்ய தொடங்கியுள்ளார்.

மீண்டும் பெண் குழந்தை.. 6 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்தே கொன்ற மாமியார் ? - பீகாரில் அதிர்ச்சி !

இதைத்தொடர்ந்து மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், அப்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தைக்கும் ஒரு கண் பார்வை குறைபாடு இருந்துள்ளது. இதனால் தொடர்ந்து மருமகளை கொடுமை செய்து வந்துள்ளார் மாமியார். மூத்த பிள்ளைக்கு 6 வயது, 2-வது பிள்ளைக்கு 3 வயது என இருக்கும் நிலையில், அண்மையில் குசம் தேவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார்.

அப்போது அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது கருவில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மீண்டும் அவரை கொடுமை செய்துள்ளார் மாமியார். மேலும் 6 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் கணவர், மாமியார் அவரை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளனர். இதில் குசம் தேவி பரிதாபமாக உயிரிழந்ததாக கூறபடுகிறது.

மீண்டும் பெண் குழந்தை.. 6 மாத கர்ப்பிணி பெண்ணை அடித்தே கொன்ற மாமியார் ? - பீகாரில் அதிர்ச்சி !

இதைத்தொடர்ந்து குசம் தேவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மாமியார் குடும்பத்தினர் கூறவே, இதுகுறித்து போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த குசம் தேவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, தீவிரமாக விசாரித்தனர்.

அப்போது மாமியார், கணவர் மீது குசம் தேவியின் தாய் உள்ளிட்ட பலரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் தனது சகோதரி குசம் தேவியை, இவர்கள் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி வருவதாகவும், குசம் தேவியின் சகோதரி மாலதி தேவி புகார் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட குசம் தேவியின் கணவர் மற்றும் மாமியாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

3-வதாக மீண்டும் பெண் குழந்தை கருவில் இருந்ததால், 6 மாத கர்ப்பிணி மருமகளை அடித்தே கொன்ற மாமியார், கணவரின் செயல் பீகாரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories